சாய்ந்தமருது கடற்கரையில் புதிய மையவாடி; கல்முனை மாநகர சபை தீர்மானம்!

???????????????????????????????

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது கடற்கரை பகுதியில் புதிய முஸ்லிம் மையவாடி ஒன்றை உருவாக்குவதற்கு கல்முனை மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முதல்வர் சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போது பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜித் இது தொடர்பிலான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தார்.

“சாய்ந்தமருது 15,17 ஆம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தை முஸ்லிம் மையவாடியாக பிரகடனம் செய்வதற்கான இச்சபையில் தனி நபர் பிரேரணை ஒன்றை முன்மொழிகின்றேன்.

கிழக்கு- கடற்கரையாகவும் மேற்கு- கடற்கரை வீதியாகவும் வடக்கு- மௌலானா வீதியையும் தெற்கு- மாளிகா வீதியை எல்லையாகவும் கொண்டதாக மேற்படி மையவாடி அமைந்திருக்கும்.

எமது சாய்ந்தமருதுப் பிரதேசம் 17 கிராம சேவகர் பிரிவுகளையும், வொலிவேரியன் கிராமத்தையும் உள்ளடக்கியதாக சுமார் நாற்பதாயிரம் சனத்தொகையைக் கொண்டுள்ளது.

இந்நிலையில் இவ்வூரில் ஜனாஸா நல்லடக்கத்துக்காக அக்பர் மையவாடி, தக்வா மையவாடி ஆகிய இரண்டு மையவாடிகளை மட்டுமே சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் பராமரித்து வருகின்றது.

தற்போதைய சனத்தொகையின் அடிப்படையில் இவ்விரண்டு மையவாடிகளும் போதாமல் இருக்கின்றது. இதனால் காரைதீவு பிரதேச சபை எல்லைக்குள் இருக்கும் அந்நூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியை சாய்ந்தமருது மக்கள் ஜனாஸா நல்லடக்கத்துக்குப் பயன்படுத்துகின்றார்கள்.

எனவே மேற்படி மையவாடியை பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இச்சபையைக் கோருகிறேன்” என்று பிரதி முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

இப்பிரேரணை அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த மையவாடியை உருவாக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு முதல்வர் நிஸாம் காரியப்பர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

??????????????????????????????????????????????????????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*