மைத்திரியின் பதவியேற்பை முன்னிட்டு கி.மா.சபை மு.கா. குழுத் தலைவர் ஜெமீல் அலுவலகத்தில் துஆப் பிரார்த்தனை!

j1

-எம்.வை.அமீர்-

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன சுதந்திர சதுக்கத்தில் பதவியேற்றவேளை கிழக்கு மாகாண சபை மு.கா. குழுத் தலைவரும் அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான வர் ஏ.எம்.ஜெமீல் அவர்களது சாய்ந்தமருது அலுவலகத்தில் விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.

ஏ.எம்.ஜெமீல் அவர்களது செயலாளர் முனாஸ் முகைதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழவில் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஸீர் உள்ளிட்ட பிரமுகர்களும் பெரும்திரளான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். இதன்போது அனைவருக்கும் பாற்சோறு பரிமாறப்பட்டது.

துஆ பிரார்த்தனையை சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் பேஷ் இமாம் இமாம் எம்.ஐ.ஆதம்பாவா நிகழத்தினார்.

j2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*