சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து பசில் ராஜபக்ஷ ராஜினாமா!

images (1)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விலகியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மஹந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்று பசில் ராஜபக்ஷ இவ்வாறு பதவி விலகியுள்ளார்.

ஜனவரி 15ம் திகதியுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக அவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு விலகல் கடிதம் அனுப்பியுள்ள பசில் ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் பசில் ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நியாயமானதாக நடத்தி முடிக்க ஒத்துழைத்த தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட அனைத்து அரச ஊழியர்கள், பொலிஸார், பாதுகாப்பு பிரிவினருக்கும் பசில் ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின் பசில் ராஜபக்ஷ தனது மனைவியுடன் அமெரிக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*