சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வென்றெடுக்க தயாராகிறது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்!

download

சாய்ந்தமருதுக்கு தனியான் நகர சபை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மரைக்காயர் சபைக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது மக்களின் நீண்ட காலத் தேவையான தனி உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை இதுவரை காலமும் பொது அமைப்பினரும் தனி நபர்களுமே முன்னெடுத்து வந்தனர்.

எனினும் இதனை சாய்ந்தமருது சமூகத்தின் ஒட்டு மொத்த கோரிக்கையாக வலுப்படுத்தி வென்றெடுக்கும் நோக்கில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் முன்னிற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதன் பேரில் மரைக்காயர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கோரிக்கையை அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும் கவனத்திற்கு கொண்டு சென்று நகர சபையை வென்றெடுப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*