கல்முனை மாநகர சபையில் சுதந்திர தின நிகழ்வு; மின் விளக்குகளால் அலங்காரம்!

???????????????????????????????IMG_0007

இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த விசேட நிகழ்வு இன்று காலை மாநகர சபை முன்றலில் இடம்பெற்றது.

மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் மாநகர முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

அதேவேளை சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு பொது நிர்வாக அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைவாக கல்முனை மாநகர சபை வளாகம் நேற்று இரவு அலங்கார மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

?????????????????????????????????????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ???????????????????????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*