வடக்கு கிழக்கில் மாகாணங்களில் ஆளுநர்களாகவும் அரசாங்க அதிபர்களாகவும் படை உயரதிகாரிகள் ஏன்?

நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆளுநர்களாகவும், அரசாங்க அதிபர்களாகவும் சிவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கத்தக்கதாக, வடக்கு, கிழக்கில் படை உயரதிகாரிகள் அவ்வாறான பதவிகளில் அமர்த்தப்பட்டிருப்பது ஏன்? என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாழைச்சேனையில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரகார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

வாழைச்சேனை பிரசாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத், மாகாண சபை வேட்பாளர்களான ஹாபிஸ் நசீர் அஹமத், சவாஹிர் சாலி, சட்டத்தரணி ராசிக் ஆகியோரும் உரையாற்றினர்.

வேட்பாளர் இஸ்மாயில் ஹாஜியார் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் மீராமுஹதின் ஹாஜியார் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். அமைப்பாளர் ஹீசைன் தலைமை தாங்கினார்.

பெருந்திரளான மக்கள் பங்குபற்றிய இப்பிரசாரக் கூட்டத்தில் மு.கா.தலைவர் அமைச்சர் ஹக்கீம் நீண்ட உரை ஒன்றை ஆற்றினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;

“தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களுக்காக பரிந்து பேச முன்வந்துள்ளது. முஸ்லிம் தரப்பின் தேவைகளை அவர்களிடம் முன்வைத்தால் எங்களுக்காக அவற்றைப் பெற்றுத்தர அவர்களால் முடியும் என்கிறார்கள். இவ்வாறுதான் விடுதலைப் புலிகளும் கூறி வந்தனர்.

முஸ்லிம்கள் தனித்துவ அடையாளங்களைக் கொண்ட ஒரு தேசிய இனம். அதன் உரிமைகளைச் சொந்தக் கால்களில் நின்று பெற்றுக் கொள்ளும் திராணி எங்களுக்கு உள்ளது என்பதை சகல தரப்பினர்களுக்கும் உறுதியாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்” என்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

நேற்று சனிக்கிழமை அமைச்சர் ஹக்கீம், மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, வாழைச்சேனை ஆகிய இடங்களில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரகாரம் கூட்டங்களில் உரையாற்றினார்.

Subscribe to Comments RSS Feed in this post

2 Responses

  1. நீதி அமைச்சரே இவ்வளவு காலமும் ஆழ்ந்த உறக்கத்திலா இருந்தீர்கள்? தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவடத்திட்க்கே ஒரு சிறுபான்மை இன அரசாங்க அதிபரை நியமிக்க கையாலாகாத தன்மை உடைய நீதி அமைச்சு பதவியினை இரு வருடங்களாக……? 18 வது அரசமைப்பு திருத்தம் நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கும்போது, வடக்கு,கிழக்கில் பெரும்பான்மை இனத்தவர்கள் ஆளுநராகவும்,அரசாங்க அதிபர்களாகவும் இருந்ததை நீங்கள் அறியாமல் இருந்தது விந்தைதான்….?

  2. SLMC Leader must ask that question in the parliament not from the political stage

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*