தொப்பையை தணிக்க இதுதான் வழி!

gros ventre

இன்றைய காலத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைவு. மாறாக கடைகளில் பார்த்ததும் சாப்பிடும் வண்ணம் சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களான பிட்சா, பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை உட்கொண்டு வருவதோடு, எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களின் உடலில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்களானது அதிகரித்து, உடல் பருமன் அதிகரித்து தொப்பை வர ஆரம்பிக்கிறது.

இப்படியே தொடர்ந்தால், எழுந்து நடக்க முடியாத அளவில் போவதோடு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். குறிப்பாக இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் விரைவில் வரக்கூடும்.

ஆகவே உடல் பருமன் அதிகம் இருந்தால், முடிந்த அளவில் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டிலேயே கலோரி குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

குறிப்பாக அன்றாடம் உடற்பயிற்சி செய்து, உண்ணும் உணவில் கலோரிகள் குறைவான உணவுகளை சேர்த்து வந்தால், உடல் பருமன் குறையும். இங்கு கலோரி குறைவாக இருக்கும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பிடித்ததை சமைத்து சாப்பிட்டு வாருங்கள்.

காளான்
காளானில் வைட்டமின் டி மற்றும் செலினியம் அதிகம் நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டால் மன அழுத்தம் குறைந்து, நல்ல தூக்கத்தைப் பெறலாம். மேலும் இதில் கலோரிகளும் குறைவாக இருப்பதால், இவற்றை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் நிறைந்திருப்பதால், இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய இதர சத்துக்களான வைட்டமின் கே, பொட்டாசியம் போன்றவையும் கிடைக்கும். மேலும் உடல் எடையும் குறையும்.

அஸ்பாரகஸ்
அஸ்பாரகஸில் கலோரிகளே கிடையாது. மேலும் இது மிகவும் சுவையானதும், ஆரோக்கியமானதும் கூட. அதுமட்டுமின்றி, அஸ்பாரகஸில் உடலுக்கு வேண்டிய வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் அதிகம் நிறைந்துள்ளது.

தர்பூசணி
தர்பூசணியிலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தர்பூசணி மிகவும் சிறப்பான உணவுப் பொருள். ஆகவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் உட்கொண்டு வருவது நல்ல பலனைத் தரும்.

தக்காளி
சாலட் செய்யும் போது, அதில் மறக்காமல் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் தக்காளியில் உள்ள லைகோபைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் இதில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டு வந்தால், விரைவில் வயிறு நிறைந்துவிடும்.

செலரி
செலரியில் கலோரிகள் சுத்தமாக இல்லை. மேலும் இதில் வைட்டமின் கே போதிய அளவில் நிறைந்துள்ளது. அத்துடன் இதில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், இதுவும் அடிக்கடி பசி எடுப்பதை தடுத்து, உடல் பருமன் அதிகரிப்பதை தடுக்கும்.

ப்ராக்கோலி
இந்த சூப்பர் உணவுப் பொருளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதிலும் கலோரிகள் இல்லாததால், இதனை தினமும் உணவில் சிறிது சேர்த்து வருவது மிகவும் சிறந்தது.

சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. எனவே சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை சேர்த்து வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, கலோரிகள் இல்லாததால் உடல் எடையும் குறையும்.

குடைமிளகாய்
குடைமிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. ஆகவே இதனையும் உணவில் அதிக அளவில் சேர்த்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பரங்கிக்காய்
பரங்கிக்காயில் நீர்ச்சது அதிகம் இருப்பதுடன், வைட்டமின்களும், இதர சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கலோரிகளும் இல்லை. ஆகவே எடையை குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.

பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, கடுகு கீரை, கேல் போன்றவற்றில் வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து அமிகம் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உணவில் சேர்த்து வந்தால், தொப்பை வருவதைத் தவிர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*