பெண்கள் சமாதியாக்கப்படாது சமத்துவத்தை வழங்கிய மார்க்கம் இஸ்லாத்தைத் தவிர வேறு ஏதும் உலகில் உண்டோ..??

10409186_350366771797788_4901262842851065019_nஇன்று இஸ்லாத்தினைக் குறை கூற விளைபவர்கள் வைக்கும் முக்கிய குற்றச் சாட்டுகளில் ஒன்று இஸ்லாம் ஆண்,பெண் சமத்துவத்தினை வழங்குவதில்லை என்பதாகும்.

இதனை ஏன் கூறுகிறார்கள்..? எனத் தெரியவில்லை. நியாயமான காரணங்களினையும் இது வரை யாரும் முன் வைத்ததாகவும் அறிய முடியவில்லை. ஒரு பெண்ணிற்கு எந்தெந்த உரிமைகளையெல்லாம் வழங்க வேண்டுமோ அத்தனை உரிமைகளையும் வழங்கி பெண்களை கண்ணியப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே ஒரு மார்க்கம் என்றால் அது இஸ்லாத்தினைத் தவிர வேறெதுவும் இல்லை என்றே கூற வேண்டும்.

ஜாஹிலியா காலத்திலே பெண் பிள்ளைகள் பிறந்தால் அதனை கேவலமாக கருதி அதனை கொலை செய்வார்கள்.பெண் பிள்ளைகள் பெற்ற செயலினை அறிந்தாலே அவர்கள் முகங்கள் கறுத்து விடும்.இப்படியான காலத்தில் உதயமான கண்மணி நபி நாயகம் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தோடு பதின் ஒன்றாக இராது இஸ்லாத்தின் அடிப்படையில் இச் செயலினைத் தடுத்தார்கள்.

அந்த இடத்தில் இஸ்லாம் ஆண்,பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்தியது. இப்படியான இஸ்லாத்தை பார்த்து பெண்களுக்கு சமத்துவம் வழங்குவதில்லை என்றால் எங்ஙனம் ஏற்புடையது..?

அன்றைய ஜாஹிலியா காலம் போன்று இன்றும் பெண் குழந்தைகளினை அழிக்க உலகம் தவறிவிடவில்லை.அண்மையில் ஜப்பான் அரசு சீனாவில் இருந்து பெண்களை திருமணத்திற்காக இறக்குமதி செய்திருந்தது.இதற்கு வித்திட்ட காரணி எது..?என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆய்வின் முடிவு என்ன தெரியுமா..?

ஜப்பான் நாட்டவர்கள் அதிகம் குழந்தை பெற்றுக்கொள்வதில் நாட்டம் காட்டுவதில்லையாம்.தங்களினை எதிர் காலத்திலே பராமரித்துக் கொள்ள பிள்ளை ஒன்று வேண்டும் என்பதற்காக ஒரு பிள்ளையை பெற்றுக்கொள்வார்களாம்.

பெண் பிள்ளையை பெறும் போது தன்னை சரியாக பராமரிக்க முடியாது என்பதற்காக பரிசோதனைகள் மூலம் ஆண் பிள்ளையை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்கிறார்களாம்.

அப்படியானால் இச் செயல் மூலம் எத்தனை பெண் பிள்ளைகள் தங்கள் தாயின் கருவறைக்குள் மரணத்தை சந்தித்திருக்கும்..??அன்றைய ஜாஹிலியாக் காலத்தில் இருந்த அவ்வாறான தவறான செயல்களினைப் போன்று இன்றும் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால்,நவீனம் என்ற முலாம் மூலம் இதனை பிழை இல்லை என்ற தோரணையில் காட்டுகிறார்கள். அன்று இதனை பிழை என சுட்டிக் காட்ட நபி இருந்தார். இன்று இதனை பிழை எனக் காட்ட நபி அவர்களிற்கு இறக்கப்பட்ட குர்ஆன் மாத்திரமே உள்ளது.

ஜப்பான் நாட்டில் மட்டும் அல்ல உலகமெங்கும் ஆண்களை விட அதிகம் பெண் பிள்ளைகள் சீதனக் கொடுமையின் எதிர்விளைவினாலும்,பொருளாதார நிலை ஆகியவற்றை கருத்திற் கொண்டும்,பராமரிப்பு கடினம் போன்ற காரணிகளை கருத்திற் கொண்டு கருவிலேயே சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்தினை தங்கள் வாழ்க்கை நெறியாக கொண்டிருப்பின் இந் நிலைமை தோற்றுவிக்கப்பட்டிருக்குமா..??

பெண்கள் சமத்துவம் பற்றி கதைக்க முன்பு சமாதியாவதை நிறுத்துங்கள்..!
இஸ்லாம் அதற்கெதிராக போராடுவதைப் போல நீங்கள் போராடுங்கள்..

பெண்கள் இல்லாமல் சமத்துவம் எதற்கு..? இப்படியான மதம் சமத்துவத்தை வழங்காது என்றால் ஏற்பீர்களா..?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*