கல்முனையில் குப்பை நெருக்கடியை தீர்க்க முதல்வர் அவசர நடவடிக்கை!

Nizam2-150x150சாய்ந்தமருது உட்பட கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ள குப்பைகளை துரிதமாக அகற்றுவதற்கு மாநகர முதல்வர் எம்.நிசாம் காரியப்பர் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன் பிரகாரம் நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் தினசரி மூன்று தடவைகள் குப்பைகளை சேகரித்து அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாநகர  ஆணையாளர் ஜே.லியாகத் அலியுடன் முதல்வர் மேற்கொண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.

இப்பணியில் ஈடுபடும் சுகாதாரத்    தொழிலாளர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தினசரி 3 தடவை திண்மக் கழிவகற்றல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை துரித கதியில் அகற்றி இந்நெருக்கடி நிலைக்கு தீர்வு காண முடியும் என எதிர்பார்ப்பதாக முதல்வர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*