அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் “சுகாதார வாழ்வு மையம்” திறப்பு!

amh

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் “சுகாதார வாழ்வு மையம்” நிறுவப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இதன் திறப்பு விழாவில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன் உட்பட மற்றும் பல வைத்தியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மேற்படி பிரிவுக்கு தேவையான ஒரு தொகுதி உபகரணங்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கி வைத்தார்.

இந்த சுகாதார வாழ்வு மையத்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குருதி அமுக்கம், நீரிழிவு, கொளஸ்றோல் மற்றும் தொற்றா நோய் போன்ற நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சையும் வழங்கப்படும் என வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

இச்சுகாதார வாழ்வு மையத்தை மக்கள் சரியாக பயன்படுத்தினால் இதன் மூலம் கூடுதலான பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*