நாடாளுமன்றம் ஒத்திவைப்பு; அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளின் அங்கீகரிப்புக்கு ஆப்பு!

parliament-new

நாடாளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்றுக்காலை 9.30க்கு கூடியது. அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளை அங்கீகரிப்பதற்காக விசேட அமர்வை நடத்துவதற்கு நாடாளுமன்றம் கூடப்பட்டபோதும் அவையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அவையமர்வை 5 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகவே அவை நடவடிக்கை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து கட்சித்தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் தீர்மானம் எதுவும் எட்டப்படாததையடுத்தே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*