மெகி நுாடுல்ஸ் ஆபத்தானது; இந்தியாவின் பல மாநிலங்களில் தடை; பொலிவுட் பிரபலங்கள் மீதும் வழக்கு!

maggi

மெகி நுாடுல்ஸ்சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இரசாயனம் கலந்து உள்ளது என, டில்லி உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கேரளா, பீகார் உட்பட பல மாநிலங்களின் அரசுகளினால் இந்த நூடுல்ஸ்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பிரகாரம் மெகி நுாடுல்ஸ் பக்கெட்டுகள், கடைகளில் ஷோகேஸ்களில் இருந்து அகற்றப்பட்டு வருகின்றன.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும், அந்த உணவு பண்டம், சாப்பிட பாதுகாப்பற்றது என டில்லி ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பல மாநிலங்களில்

பீகாரில் ‘மெகி’ நுாடுல்ஸ்சை வாங்கி சாப்பிட்ட வழக்கறிஞர் ஒருவருக்கு உடல் நலமில்லாமல் போனதை அடுத்து, மெகி நுாடுல்ஸ்சை தயாரிக்கும் ‘நெஸ்லே இந்தியா’ நிறுவனத்தின் அதிகாரிகள் இருவர் மற்றும், அதன் விளம்பரங்களில் படத்தில் நடித்த, பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது வழக்கு தொடர, பீகார் மாநிலத்தின், முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றம், பொலிஸாருக்கு நேற்று உத்தரவிட்டது.

மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி, தேவைப்பட்டால், இந்த ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மெகி நுாடுல்ஸ் உணவு பண்டத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக, எம்.எஸ்.ஜி. (monosodium glutamate), எனப்படும், ‘மோனோ சோடியம் குளுடமேட்’ என்ற ரசாயனம் இருந்தது, இந்திய உத்தர .பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட நெஸ்லே நிறுவனம் மற்றும் அதன் விளம்பர படங்களில் நடித்த பாலிவுட் நட்சத்திரங்கள் மூவர் மீது எந்த நேரமும் நடவடிக்கை பாயும் என, எதிர்பார்க்கப்படும் நிலையில், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது, இந்தியாவில் அபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*