பதினொரு வயதில் மருதமுனை கடற்கரையில் கச்சான் கொட்டை விற்றவன் வறுமையின் கொடுமையை நன்கு அனுபவித்துள்ளேன்!

2-SIDDIQUE NADEER-04-08-2015-பி.எம்.எம்.ஏ.காதர்-

எனக்கு பதினொரு வயதாக இருக்கும் போது மருதமுனை கடற்கரையிலே கச்சான் கொட்டை விற்றவன் நான். வறுமையான வாழ்வு எவ்வளவு கொடுமையானது என்பதை நேரடியாக அனுபவித்தவன் அதனால்தான் இன்று நான் உழைக்கின்ற பணத்தில் பெரும் பகுதியை எழைகளுக்கு கொடுத்து உதவுகின்றேன்.என தெரிவித்தார் மைஹோப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மருதமுனை வேட்பாளருமான சித்தீக் நதீர்.

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மருதமுனை தையல் பயிற்சி நிலைய பயிற்ச்சியாளர்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் இன்று (01-08-2015)மாலை மருதமுனை பயிற்சி நிலையக் கட்டத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சித்தீக் நதீர் இவ்வாறு தெரிவித்தார்.

பயிற்சி நிலையத்தின் ஆலோசகர் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.ஆர்.ஏ.றாசிக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான  றிஷாட் பதியுதீனின் இணைப்பதிகாரி சீ.எம்.ஹலீம் கலந்து கொண்டார்.

மேலும் ஒய்வுபெற்ற அதிபர் ஏ.எல்.மீராமுகைதீன்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸிஸ்;  மருதமுனை மத்திய குழுவின்  செயலாளர் எம்.ஏ.முபீத்,மற்றும் ஏ.எம்.பாறூக் உள்ளீட்ட பயிற்சியாளர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு வேட்பாளர் சித்தீக் நதீர் மேலும் உரையாற்றுகையில் :-அரசியலுக்கு நான் புதியவன் எனக்கு அரசியலின் நெளிவு சுளிவு தெரியாவிட்டாலும் சமூக சேவைக்கா நான் உழைக்கின்ற சொந்தப் பணத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்கு கொடுப்பதில் உள்ள நெளிவு சுளிவுகளை நன்கு அறிந்திருக்கின்றேன்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் எனக்கு அரசியலில் நெளிவு சுளிவு தெரியாதென்று கூறியிருக்கின்றார் அவர் அரசியலுக்கு வரும்போது அவரும் நெளிவு சுளிவ தெரியாதவராகத்தான் இருந்தார்  பின்னர்தான் கற்றுக்கொண்;டார் எனது கிராமத்திற்கு வந்து என்னை அவர் விமர்சிக்கத்தேவையில்லை என்று அரசில் அனுபவமுள்ள அவருக்கு ஆலோசனை கூறுகின்றேன்.

எனது கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் எழை மக்கள் மீpது அதிக இரக்கம் கொண்டவர் அதனால் நாட்டின் பலபாகங்களில் எழைகளுக்காக பல தையல் பயிற்சி நிலையங்களை உருவாக்கி அதில் எமது சகோதரிகளுக்கு தையல் பயிற்சி வழங்கி தொழில் வாய்;புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான் அதில் ஒன்று தான் மருதமுனை தையல் பயிற்சி நலையமும் ஆகும்.

எனவே இதில் பயிற்சி பெறுகின்ற சகோதரிகள் பயிற்சி முடிந்ததும் தையல் இயந்திரங்கள் உங்களுக்கு வழங்கப்படும் இதன் மூலம் நீங்கள் உங்கள் சுய தொழிலை முன்னேற்றிக் கொள்ள முடியும் என சித்தீக் நதீர மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*