சாய்ந்தமருது பள்ளிவாசல் சமூகம் எதையுமே செய்து காட்டாத தலைவர்கள் பின்னால் அலைவது கவலையான விடயம்!

 

1

-எம்.வை.அமீர்-

அம்பாறை மாவட்டத்தைச் சாராத அம்பாறை மாவட்டத்தின் மீது தாங்கள் மிகுந்த அக்கறையுடன் இருக்கின்றோம் என்று கூறிக்கொண்டு திரியும் சிலர் இம்மாவட்டத்தின் மீது எவ்வித அக்கறையும் இல்லாது அம்பாறை மாவட்டம் பிரதிநிதித்துவத்தை இழந்தாலும் பரவாயில்லை இம்மக்களைப் பகடைக்கைகளாக பயன்படுத்திக்கொண்டு தங்களது அரசியல் பலம்களை பரிற்சிக்க முனைவதாக தேசிய காங்கிரசின் தேசியத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

சாய்ந்தமருது ஒஸ்மான் வீதியில் தேசிய காங்கிரசின் தேர்தல் காரியாலயம் ஒன்றை அக்பர் ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் எம்.எம்.ஜப்பார் அவர்களது தலைமையில் 2015-08-05 அன்று திறந்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவர்களால் பிரதிநிதிதத்துவத்தை பெறமுடிந்தால் தன்னால் மகிழ்வுறமுடியும் என தெரிவித்த முன்னாள் அமைச்சர், அவ்வாறு பிரதிநிதித்துவத்தைப் பெறக்கூடிய வியூகம் எதனையும் இவர்கள் வகுக்கவில்லை என்றும் தேசிய காங்கிரஸ் மட்டுமே மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களது வழியில் வியூகம் அமைத்து செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

தேசிய காங்கிரசின் வியூகங்கள் எப்போதும் பிழைத்ததில்லை என்று தெரிவித்த அதாவுல்லாஹ், சாய்ந்தமருது மக்களும் சம்மாந்துறை மக்களும் குறைந்த அளவான வாக்குகளை கடந்த தேர்தலில் தேசிய காங்கிரசின் வியூகத்துக்கு வழங்கியிருபார்களாகியிருந்தால் இவ்இரண்டு ஊர்களும் தங்களது ஊரில் இருந்து பிரதிநிதிகளை பெற்றிருக்கும் என்றும் தெரிவித்தார்.  சாய்ந்தமருது மக்கள் தேசிய காங்கிரசின் வியூகத்துக்கு ஓரளவே வாக்களித்திருந்தனர்.

பாராளமன்ற அந்தஸ்த்தை வஸீர் அதிபர் அவர்கள் இழந்த போதிலும் சாய்ந்தமருது மக்களுக்காக அக்கரைப்பற்றில் பிறந்த போதிலும் இப்பிரதேசங்களை தான் பிறந்த மண்ணாகக் கருதும் இம்மண்ணில் ஓடித்திரிந்த உடன்பிறப்புக்களை கொண்ட இந்த ஆதாவுல்லாஹ் ஒதுக்கவில்லை என்றும் தான் சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தார், இங்கு காலம் காலமாக இருந்து வந்த வைத்தியசாலை சுனாமியால் முற்றாக சேதமுற்றதன் காரணாமாக அம்மக்களுக்காக  வைத்தியசாலை ஒன்றை அமைக்கவேண்டிய அவசர தேவை இருந்தது.

அதனை குறித்த இடத்தில் அமைப்பதில் சிலருக்கு விருப்பமின்மை இருந்தது இந்நிலையில் சாய்ந்தமருது மக்களுக்காக வைத்தியசாலையை அவர்கள் விரும்பிய இடத்தில் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை நாங்கள் செய்தோம் அதனூடாக கம்பீரத்துடன் அங்கு வைத்தியசாலை காட்சியளிக்கின்றது.

பிரதேச செயலகத்தை அமைத்தோம் வீதிகளை புனரமைத்தோம் நீர்விநியோக சபையின் பொறியலாளர் பிரிவை அமைத்தோம் பாலங்கள் அமைத்தோம் அவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் உள்ளுராட்சி சபையை நிறுவுவதற்காக, கல்முனையில் வாழும் எந்த பிரதேசத்துக்குமோ சமூகத்துக்குமோ பாதிப்பு ஏற்படாத வகையில் நான்கு வலயங்களாகப் பிரித்து கல்முனைக்கு மாநகரசபையும் சாய்ந்தமருது உள்ளிட்ட ஏனைய மூன்று பிரதேசங்களுக்கும் நகரசபையும் வழங்க இருந்த நிலையில் அம்முயற்ச்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் தடுக்கப்பட்டதையும் மக்கள் அறிவர் என்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயத்தில் பல்வேறு முன்னெடுப்புக்களை செய்த எங்களிடம் பேசாத சாய்ந்தமருது பள்ளிவாசல் சமூகம் எதையுமே செய்து காட்டாத நாங்கள் தான் தலைவர்கள் என்று கூறிக் கொண்டிருப்பவர்களின் பின்னால் அலைவது கவலையான விடயம் என்றும் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபையை தேசிய காங்கிரசே பெற்றுக்கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது  மக்களுக்கு எதையுமே செய்யாமல் நாங்கள் இங்கு பேசவில்லை என்று கூறிய அதாவுல்லாஹ், மனச்சாட்சியுள்ள மக்கள் தேசிய காங்கிரசையே ஆதரிப்பார் என்றும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட தேர்தல் களநிலவரங்கள் பற்றிக்கருத்துத் தெரிவித்த அதாவுல்லாஹ், அம்பாறை மாவட்டத்தை பொதுஜன ஐக்கிய முன்னணியே கைப்பற்றும் எனக்கூறிய அவர், கடந்தகால தேர்தல் முடிவுகளை பாடமாகக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். கண்டித் தலைமைத்துவமோ அல்லது வன்னித் தலைமைத்துவமோ தங்களுக்குச் சவால் இல்லை என்று தெரிவித்த தேசிய காங்கிரசின் தலைவர், வன்னித் தலைமைத்துவத்தின் வருகையால் தங்களது வாக்கு வங்கியில் சரிவு எதனையும் ஏற்படுத்தவில்லை என்றும் அது மாவட்ட ரீதியில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கள நிலவரப்படி பொதுஜன ஐக்கிய முன்னணி நான்கு ஆசனங்களையும் ஐக்கியதேசியக்கட்சி இரண்டு ஆசனங்களையும் தமிழ் கூடமைப்பு ஒரு ஆசனத்தையும் பெறும் என்று தெரிவித்த அதாவுல்லாஹ், மயில் வெட்டுப்புள்ளிகுள்ளேயே வராது ஒளிந்து விடும் என்றும் தெரிவித்தார்.

சிராஸ் அவசரப்பட்டுவிட்டதாக குறிப்பிட்ட அவர், தங்களுடன் இருந்திருந்தால் அவர் நிற்சயிக்கப்பட்ட பாராளமன்ற உறுப்பினராக ஆகியிருபார் என்றும் அவருக்கு நாடவில்லை போலும் என்றும் தெரிவித்தார். மாவட்ட ரீதியில் சிந்திக்கும் எவனும் தான் ஆளிக்கும் வாக்கு யாருக்காவது பயன்படவேண்டும் என்றே யோசிப்பான் என்று கூறிய அதாவுல்லாஹ், மயிலுக்கு வாக்களிப்பதை விட வீட்டிலேயே இருந்து விடலாம் என்றும் தெரிவித்தார்.

இந்த அம்பாறை மாவட்டத்திலேயே பிறந்து இம்மக்களுடன் இரண்டறக்கலந்து இவர்களது சுழிவுகள் நெளிவுகளை அறிந்த தேசிய காங்கிரசின் தலைமை உள்ளிட்ட குழுவினரை ஆதரிப்பதன் ஊடாக மட்டுமே இப்பிராந்திய மக்களின் அபிலாசைகளை அடைந்து கொள்ள முடியும் என தெரிவித்த அதாவுல்லாஹ், இப்பிராந்திய எதிர்கால சிறார்களின் நன்மைகருதி ஒன்றுபடுமாறும் பணத்துக்கோ அல்லது ஆசைவார்த்தைகளுக்கோ அடிபணியாது நம்மை நாமே ஆளவேண்டும் என்ற அடிப்படையில் இப்பிராந்திய மக்களின் தேவைகளை அறிந்து செயற்படும் தேசிய காங்கிரசின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.

2 (1) 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*