அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு கிடைக்க இருப்பது முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகளே!

uthuman-சலீம் றமீஸ்-

1989ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு ஏற்பட்ட நிலமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஏற்படாமல் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.

சென்ற 1989ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் நமது தலைவர் அஸ்ரப் அவர்கள் நமது அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு வாக்களிப்பதன் ஊடாக நமது 03 முஸ்லிம் எம்பிக்களைப் பெறலாம் என கோரிக்கை விடுத்தார்.

அன்று நமது தலைவர் அஷ்ரப் அவர்களின் வேண்டுகோளை புறக்கணித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் அரசியல் வாதிகள் தலைவர் அஸ்ரப் சொல்வது தவரான தகவல் எனவும்,  நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களாக யானைச் சின்னத்தில் போட்டி இடுகின்றோம் நாங்கள் எம்பீக்களாக தெரிவு செய்யப்படுவோம் அம்பாறை மாவட்ட முஸ்லீம்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று ஒவ்வொரு ஊர்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர் தெரிவித்தார்கள்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் வாக்களார்கள் சுமார் 33ஆயிரம் பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திற்கு வாக்களித்தனர். திகாமடுல்ல தேர்தல் முடிவுகளின் படி அம்பாறை தொகுதியில் இருந்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த திரு.தயாரத்ன, திரு.கலபதி, ஏ.பக்மீம ஆகியோர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட வரலாற்றை அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் என்றும் மறந்து விட முடியாதுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 03 வேட்பாளர்களை ஆதரித்து அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இடம் பெற்ற தேர்தல் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போது முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்….

பரம்பரை பரம்பரையாக அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், கல்முனை, சம்பாந்துறை தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலில் 03 முஸ்லிம் எம்பீக்கள் தெரிவு செய்யப்படுவர்.

அம்பாறை தொகுதியில் 01 பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படுவர். 1989ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 03 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்குப் பதிலாக தலைவர் அஷ்ரப் அவர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டார்.

அதே நிலமைதான் அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஏற்படாமல் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் 03 முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களும், வேட்பாளர் தயா கமகேவுக்கு ஆதரவாக அட்டாளைச்சேனையில் ஒரு முஸ்லிம் வேட்பாளரும், கல்முனையில் ஒரு முஸ்லிம் வேட்பாளரும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலமையில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பாரிய சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பொறுத்தவரை எங்களின் வாக்கு வங்கியில் எந்த விதமான தாக்கமும் ஏற்படவில்லை ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கிகளில் இருந்துதான் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸூக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் 02 முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் வாக்குகள் கிடைக்கவுள்ளது என்பதுதான் இன்றைய அம்பாறை மாவட்ட யதார்த்தமாகும்.

எனவே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் தேசியக் காங்கிரஸின் சார்பில் 03 முஸ்லிம் வேட்பாளர்கள் மாத்திரம் போட்டியிடுகின்றனர்.

எனவே, இவர்களுக்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக நமது முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மூன்றையும் இலகுவில் பெறக் கூடிய வாய்ப்பு நமக்கு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*