அட்டாளைச்சேனைக்கான தேசியப் பட்டியல் நியமனம் யாருக்கு? மத்திய குழுவின் உறுதியான நிலைப்பாடு இதுவே!

Hakeem (1)

-அபு அலா–

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் இம்முறை அட்டாளைச்சேனைக்கு வழங்கயிருக்கும் தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்கு வழங்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினால் நிறைவேற்றப்பட்ட ஏகமான தீர்மான கடிதம் ஒன்றை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீமுக்கும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய குழுவின் இணைச் செயலாளர் ஏ.சீ.நக்கீப் இன்று தெரிவித்தார்.

கடந்த பொதுத்தேர்தல் காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் பாலமுனை ஒலுவில் பிரதேசங்களில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது அட்டாளைச்சேனைக்கு இம்முறை தேசிப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்க ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.

அதற்கமைவாக, அட்டாளைச்சேனை மத்திய குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அங்கத்தவர்களினாலும் ஏகமான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அத்தீர்மானத்தின் படி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீர்தான் தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறத் தகுதியானவர் எனவும் அவருக்குத்தான் அந்த பிரதிநிதித்துவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையும் வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டு அத்தீர்மானத்தின் கடிதமும், அன்றைய தினம் கலந்து கொண்ட அங்கத்தவர்களின் கையொப்பமிடப்பட்ட பதிவேடும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீமுக்கும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மு.காவின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.காதர், உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், எம்.எல்.கலீல், ஆப்தீன் தமீம், மத்திய குழுவின் ஆலோசகர்களான யூ.எம்.வாஹிட், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர், அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் எ.எல்.பத்தாஹ் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் தேசிப்பட்டியல் பிரதிநிதித்துவத்தை மாகாண சபை உறுப்பினர் நஸீருக்குத்தான் வழங்க வேண்டும், அதற்கு மிகவும் பொறுத்தமானவர் அவர்தான் என்றும் இக்கூட்டத்தில் மிக ஆணித்தரமாக தெரிவித்ததைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் ஏகமான முடிவை தங்களின் கைகளை ஏந்தி தெரிவித்தனர். எனவும் இணைச் செயலாளர் ஏ.சீ.நக்கீப் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*