நூலகர் மஜீத் சிறந்த சமூக சேவையாளராக திகழ்ந்தார்; மாநகர சபையில் றஹ்மான் அனுதாபம்!

NIZAM

(அஸ்லம் எஸ்.மௌலானா)

காலம்சென்ற நூலகர் அப்துல் மஜீத் அனைவரினாலும் மதிக்கப்பட்ட ஒரு சிறந்த சமூக சேவையாளராகத் திகழ்ந்தார் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் இசட்.ஏ.எச்.றஹ்மான் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு செவ்வாய்க்கிழமை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு அனுதாப உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;;

“எமது கல்முனை மாநகர சபையின் கீழ் உள்ள கல்முனைப் பொது நூலகத்தில் மருதமுனையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.மஜீட் மிக நீண்ட காலமாக நூலகராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர். எனினும் அவர் இன்றும் நூலகர் மஜீத் என்றே அழைக்கப்படுகிறார். அந்தளவுக்கு அவர் அந்நூலகத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார்.

அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை மரணமடைந்துள்ளார். அன்னார் நல்லதொரு சமூக சேவையாளன். அவர் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல் நிருவாகத்தின் தலைவராகவும் இருந்தவர். அதேபோல் மருதமுனை பிரதேசத்தின் எல்லா விடயங்களிலும் முன்னின்று உழைத்து வந்த ஒரு சமூக சேவகன். அவர் மிகவும் நேர்மையானவர். சமூகத்தில் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டதனால் அவர் அனைவரினாலும் மதிக்கப்பட்டு வந்தார்.

அவரின் மரணம் தொடர்பில் எமது கல்முனை மாநகர சபையும் துயர்மடைய வேண்டிய கடப்பாடு உள்ளது. ஆகவே நான் இந்த சபையின் சார்பில் அவரது மறைவுக்காக ஆழந்த அனுதாபம் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கு சுவர்க்கம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.

இதனை வழிமொழிந்து மாநகர சபை உறுப்பினர் எம்.எச்.எச்.எம்.நபார் அனுதாப உரை நிகழ்த்தியதுடன் மாநகர முதல்வரும் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

KMC-31-03 (6)??????????????????????????????? ??????????????????????????????? Nafar

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*