சாய்ந்தமருது உள்ளிட்ட பிரதேசங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களை ஏற்படுத்துமாறு றிசாத் கோரிக்கை!

Rishad Badurdeen_CI

சாய்ந்தமருது உட்பட சில பிரதேசங்களுக்கு புதிய உள்ளூராட்சி மன்றங்களை ஏற்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் உள்ளுராட்சி ,மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபாவினை அண்மையில் சந்தித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் அமீர் அலி,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம்.நவவி,இஷாக் றஹ்மான்,மஹ்ருப் அப்துல்லா ஆகியோர் கூட்டாக இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளனர்.

அதேவேளை உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரிடத்தில் அமைச்சர் ரிசாதினால் கையளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

கிழக்கு மாகாணத்தில் சாய்ந்தமதருதுவுக்கான தனியானதொரு நகர சபையினை ஏற்படுத்துவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த தேர்தல் நேரத்தில் அது இடை நிறுத்தப்பட்டிருந்தது. இதனை உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில் மூதுார் பிரதேச சபையினை நகர சபையாகவும்,தோப்பூருக்கான தனியான பிரதேச சபை மற்றும் கூணித்தீவு,கட்டைப் பரிச்சான்,சம்பூர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக கட்டைப் பிரிச்சான் பிரதேச சபையாகவும் கந்தளாய் பிரதேச சபையினை நகர சபையாகவும் தரமுயர்த்த வேண்டும்.

முதலாம்,இரண்டாம் கொலனி, அனைக்கட்டு, பொட்டண்காடு,ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக அணைக்கட்டு பிரதேச சபையாகவும் குச்சவெளி பிரதேச சபையினை புல்மோட்டை மற்றும் குச்சவெளி இரு பிரதேச சபைகளாகவும் தரமுயர்த்த வேண்டும்.

வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகர சபையினை மாநகர சபையாகவும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிறுப்பு பிரதேச பையினை புதுக்குடியிறுப்பு மற்றும் ஒட்டுச் சுட்டான் பிரதேச சபைகளாகவும்

புத்தளம் மாவட்டத்தில் உள்ள கல்பிட்டி பிரதேச சபையினை கல்பிட்டி மற்றும் அக்கறைப்பற்றுக்கான தனியான இரு பிரதேச சபைகளாகவும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று மத்தி. கோரளைப்பற்று கிழக்குக்கான இரு பிரதேச சபைகளாகவும் கோரளைப்பற்று மேற்கில் உள்ள 5 கிராம அதிகாரி பிரிவுகள் கோறளைப்பற்று கிழக்குடன் தற்காலிகமாக இணைகப்பட்டுள்ளதால் அதனை மீள கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையுடன் இணைப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளதுடன்

மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார் நகர சபையினை மாநகர சபையாகவும் மறிச்சுகட்டிக்கான தனியானதொரு பிரதேச சபையினையும் உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுப்பதன் அவசியம் குறித்தும் அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*