மீண்டும் சுதந்திரக் கட்சி அமைப்பாளராகிறார் கே.ஏ.பாயிஸ்!

th (1)

முன்னாள் பிரதி அமைச்சரும் நகர சபையின் முன்னாள் தலைவருமான கே.ஏ.பாயிஸ் மீண்டும் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கபடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திரக் கட்சியில் அவரது நியமனம் குறித்து கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்கவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் பெரும்பாலும் அடுத்த வாரமளவில் நியமனமாவார் என்றும் புத்தளம் பிரதேசத்துடன் சேர்த்து கல்பிட்டியையும் தனது அமைப்பு பிரதேசமாக கோரியுள்ளதாகவும் அதற்கு கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க இணங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடுவதற்காக சு.க. அமைப்பாளர் பதவியில் இருந்து அவர் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*