பீ.ஜே. வருகையை கலவரமாக்க ஆசாத் சாலி முய‌ற்சி; உல‌மா க‌ட்சி கண்டனம்!

M

பீ.ஜே த‌மிழ் பேசும் முஸ்லிம் உல‌கின் முத‌ன்மை வாய்ந்த‌ சீர்திருத்த‌வாதி. அவ‌ர‌து க‌ருத்துக்க‌ளில் சில‌ க‌டுமையான‌ க‌ருத்து வேறுபாடுக‌ள் கொண்டிருந்தாலும் அவ‌ர் குர் ஆன் ஹ‌தீத் அறிவுள்ள‌ மிக‌ச்சிற‌ந்த‌ அறிஞ‌ர்க‌ளில் ஒருவ‌ர். அவ‌ர் இல‌ங்கை வ‌ருவ‌தை க‌ல‌வ‌ர‌மாக‌ காட்ட‌ ஆசாத் சாலி முய‌ற்சிப்ப‌தை உல‌மா க‌ட்சி வ‌ண்மையாக‌ க‌ண்டிக்கிற‌து.

அஹ்லுஸ்ஸுன்னாவின் வ‌ழியில் நின்று ப‌ணிபுரியும் பீ ஜே அவ‌ர்க‌ள் இல‌ங்கை வ‌ருவ‌தை உல‌மா க‌ட்சி வ‌ர‌வேற்கிற‌து. இத‌னை த‌டுக்க‌ ஆசாத் சாலி முனைவ‌து பொதுப‌ல‌ சேனாவின் கொந்த‌ராத்தை இவ‌ர் எடுத்துக் கொண்டுள்ளாரா என‌ கேட்க‌ வேண்டியுள்ள‌து.

இது ஒரு ஜ‌ன‌நாய‌க‌ நாடு. பீ ஜேயின் க‌ருத்துக்க‌ளுக்கு மாற்று க‌ருத்து இருக்குமாயின் அத‌ற்கு ஜ‌ம் இய்ய‌த்துல் உல‌மா ப‌தில் கொடுக்கும். ஆக‌வே உல‌மாக்க‌ள் அல்லாத‌வ‌ர்க‌ள் இது விட‌ய‌த்தை பெரிது ப‌டுத்த‌ வேண்டாம் என‌ உல‌மா க‌ட்சி சொல்லிக்கொள்கிற‌து.

-முபாரக் அப்துல் மஜீத்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*