அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவராக கலாநிதி ஏ.எம்.ஜெமீல் நியமனம்!

Jameel

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்கள் ஸ்ரீலங்கா அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவராக வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் இன்று வர்த்தக, கைத்தொழில் அமைச்சில் வைத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியும் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*