ஷியாம் கொலைக்கு DIG வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 06 பேருக்கு மரண தண்டனை!

1674863182Vaasss

பிரபல வர்த்தகர் முஹமட் ஷியாம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இணங்காணப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உட்பட்ட 06 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் நான்கு பொலிஸ் கான்ஸ்டபில்கள் ஆகிய ஆறு பேருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லலித் ஜயசூரிய, சரோஜினி வீரவர்தன மற்றும் அமேந்திர செனவிரட்ன ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*