முன்னாள் பிரதியமைச்சருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த ஐ.தே.க. ஆதரவாளருக்கு பிடியாணை!

zz (11)

கடந்த பொதுத் தேர்தலின் போது, தன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் முறைப்பாட்டாளரான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தன்மீது தாக்குதல் நடத்தியதாக, அந்த ஆதரவாளர், முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, கம்பஹா மாவட்ட பதில் நீதவான் சஞ்சய லக்மால் முன்னிலையில் நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, முறைப்பாட்டாளர், நீதிமன்றத்தில் பிரசன்னமாய் இருக்கவில்லை.

இதனையடுத்தே, அவருக்குப் பிடியாணை பிறப்பித்த பதில் நீதவான், வழக்கை ஜனவரி மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். இதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*