இலஞ்சம் பெற்ற Traffic பொலிஸ் இருவர் கைது!

arrest-slk.polce_

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு கான்ஸ்டபில்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுகேகொடை வாகனப் பிரிவு அதிகாரிகள் இருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் இராஜகிரிய பாராளுமன்ற வீதியில், வீதி சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பிலான வழக்கை தவிர்க்கவே குறித்த பொலிஸார் இருவரும் 1000 ரூபாவை இலஞ்சமாக பெற்றதாக தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்களை இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*