மு.கா. ஏற்பாட்டில் தலை நகரில் இடம்பெற்ற செனட்டர் மசூர் மௌலானா நினைவரங்கம்!

???????????A (10)

(அஷ்ரப் ஏ.சமத், செயிட் ஆஷிப்)

கிழக்கின் முதுபெரும் அரசியல் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் செனட்டருமான மர்ஹூம் எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானாவின் நினைவேந்தல் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (2015-12-18) மாலை கொழும்பு தேசிய சுவடிகள் திணைக்கள கேட்போர் அரங்கத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் பிரதான நினைவுச் சொற்பொழிவை நிகழ்த்தவிருந்த போதிலும் சுகவீனம் காரணமாக அவரால் சமூகமளிக்க முடியவில்லை என மாவை சேனாதிராஜாவினால் அறிவிக்கப்பட்டது.

அதேவேளை “தமிழ்- முஸ்லிம் ஐக்கியத்தின் குறியீடாக வாழ்ந்து மறைந்த செனட்டர் மசூர் மௌலானாவின் அர்ப்பணிப்பு மிகுந்த போராட்ட வரலாறு” பற்றி தமிழரசுக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

அத்துடன் சவூதி அரேபியாவுக்கான முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் டாக்டர் ஏ.உதுமாலெப்பை செனட்டர் மசூர் மௌலானாவின் சிறப்புகள், ஆளுமைகள் பற்றி நினைவுரை நிகழ்த்தினார்.

இதன்போது செனட்டர் மசூர் மௌலானாவின் அரசியல் பொது வாழ்வைப் பிரதிபலிக்கும் குறுந்திரைப்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மசூர் மௌலானாவின் நினைவாக அவர் தலைவராகப் பதவி வகித்த மருதமுனை மஸ்ஜிதுல் கபீா் பள்ளிவாசல் கட்டிட நிர்மாணப் பணிக்காக 25 இலட்சம் ருபா நிதி பள்ளிவாசலின் பரிபாலன சபைத் தலைவா் ஏ.சி.சக்காபிடம் முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் அதன் தேசிய அமைப்பாளா் சபீக் ரஜாப்டினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் MP, முன்னாள் அமைச்சர்களான ஏ.ஆர்.மன்சூர், ஏ.எச்.எம்.அஸ்வர், பஷீர் சேகுதாவூத், பிரதி அமைச்சர் அமீர் அலி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், கல்விமான்கள், கலை, இலக்கியவாதிகள் புத்திஜீவிகள் என பெரும் எண்ணிக்கையிலான பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

செனட்டர் மசூர் மௌலானாவின் குடும்பத்தினர் சார்பில் சட்டத்தரணி அன்சார் மௌலானா ஏற்புரை நிகழ்த்தினார். கவிஞர் கிண்ணியா அமீரலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

A (8) A (2) ??????????? A (7)
A (4) A (3) A (12) ??????????? A (11) A (1) A (9) A (13)???????????

??????????? ??????????? ??????????? ??????????? ??????????? ??????????? ??????????? ???????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*