மு.கா. செய்ய வேண்டிய பாரிய பணியை தனி மனிதனாக நின்று பரக்கத்துல்லாஹ் நிறைவேற்றியுள்ளார்!

???????????

-அஸ்ரப் ஏ.சமத்-

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பரக்கத்துல்லாஹ் எழுதிய கல்முனை மாநகர உள்ளுராட்சியும் சிவில் நிர்வாகமும் என்ற நுால் நேற்று (21) ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வு மு.கா.தலைவா்- அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. நுாலின் முதற் பிரதியை புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா்.

நுால் பற்றி மன்சூர் ஏ.காதா், தமிழ் மிரா் பத்திரிகை ஆசிரியா் ஏ. மதன், முஸ்டீன், அஸ்ரப் சிகாப்தீன், கல்முனை மாநகர மேயா் நிசாம் காரியப்பா், எதிர்க்கட்சித் தலைவர் ஏகாம்பரம் ஆகியோரும் உரையாற்றினாா்கள்.

சிரேஸ்ட ஊடகவியலாளரும் கவிஞருமான அஸ்ரப் சிகாப்தீன் பேசுகையில்;

இந்நுால் கவிதை அல்லது சிறுகதைப் புத்தகமல்ல, முஸ்லீம் கங்கிரஸ் கட்சி குழு அமைத்து எழுத வேண்டிய நுாலை ஒரு தனி மனிதனான நின்று பரக்கத்துல்லாஹ் செய்துள்ளார்.

கல்முனை மாநகரம் பற்றிய பல தகவல்கள் மற்றும் ஆவணங்களை எல்லாம் சோ்த்து இந்த கட்சிக்காக கல்முனை மநாகரம் பற்றி நுாலொன்றை எழுதியுள்ளாா்.

கல்முனையும் முஸ்லீம் காங்கிரசும் பரக்கத்துல்லாவைப் பாராட்ட வேண்டும். இதுவரை முஸ்லீம் காங்கிரசில் உள்ள உறுப்பினகள், அமைப்புக்கள் இது போன்ற ஒரு வரலாற்று நூலை எழுதவில்லை” என்று குறிப்பிட்டார்.

?????????????????????? ??????????? ??????????? ??????????? ??????????? ???????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*