ஜப்பான் நிதியுதவியுடன் கல்முனை நகர அபிவிருத்தி திட்டம்; ஹக்கீமிடம் பிரதமர் ரணில் உறுதி!

Hakeem (6)

ஜப்பான் நிதியுதவியுடன் கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் உறுதியளித்துள்ளார்.

கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை செவ்வாய்க்கிழமை (22) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

பொதுத்தேர்தல் காலத்தில் கல்முனையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை பிரதமரிடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நினைவுபடுத்தினார்.

மேலும், கல்முனை துரித நகர அபிவிருத்தித்திட்டம் தொடர்பில் பல்வேறு தேவைகளையும் குறைபாடுகளையும் பிரதமரிடம் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பான செயற்றிட்டத்தை எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04ஆம் திகதிக்கு முன்னர் தன்னிடம் கையளிக்குமாறு பிரதமர் கேட்டுள்ளார்.

கல்முனை துரித நகர அபிவிருத்தித்திட்டம், ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளது. கல்முனை புதிய நகர அபிவிருத்தித்திட்டத்துக்காக உள்வாங்கப்படும் 800 ஏக்கர் சதுப்பு நிலத்தை எந்த சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மண்ணிட்டு நிரப்பி நகர அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*