மு.கா. பிரமுகர் கோடீஸ்வர வர்த்தகர் மடகஸ்காரில் படுகொலை!

12438995_1667618336784194_1914146255249585720_n

காலி– சோலையை சேர்ந்த பிரபல மாணிக்கக்கல் வர்த்தகரும் Arabesque Private Limited பணிப்பாளருமான அப்துல் புஹாரி நயீம் ஹாஜி வயது 56 மடகஸ்கார் நாட்டுக்கு வியாபார விடயமாக சென்ற பொது அங்கு வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

இவரிடம் வியாபார நடவடிக்கைகளுக்கு தேவையான பணம், பெறுமதியான பொருள் கையில் இருந்ததாகவும் இவர் தங்கி இருந்த அறையில் வைத்து கை கால்கள் கட்டபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு ஜனாஸாவாக மீட்கப்ட்டுள்ளார்.

இது தொடர்பில் இலங்கையர்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டுள்ளதாகவும், ஜனாஸா நேற்று அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

சமுகத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிக்காக உழைத்த இவர் 1989 ஆண்டு காலி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டிஇட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*