சில பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட கணனிகள் மூலையில் கிடக்கின்றன!

???????????

 (அஷ்ரப் ஏ.சமத்)

அடுத்த 5 வருடத்திற்குள் கல்வி திட்டங்கள் மாற்றம் செய்யப்படும். அத்துடன் ஒவ்வொரு பிரதேச செயலாளா் பிரிவிலும் இரு பாடாசலைகள் வீதம் சகல வசதிகளும் கொண்ட பிரச்சித்த பாடாசாலை போன்று அபிவிருத்தி செய்யப்பட உள்ளது. இப்பாடசாலைகளுக்கு 25 கோடி ருபா நிதி வழங்கப்படும்

இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளிலும் பயிலும் 44 இலட்சம்
மாணவா்களுக்குமான இலவசப் பாடப் புத்தகங்கள் 420 வகையில் 44
மில்லியன் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவற்றுக்காக அரசாங்கம்
3.6 பில்லியன் ருபாவை செலவழித்துள்ளது என கல்வியமைச்சா் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டுக்கான இலவசப் பாடப்புத்தகங்களை மாணவா்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு கொழும்பு ஆனாந்தாக் கல்லுாாியில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சா் இராதக் கிருஸ்னன், பாராளுமன்ற
உறுப்பிணா் உபாலி மாரசிங்க கல்வியமைச்சின் செயலாளா், கல்வி வெளியீட்டுத்
திணைக்களத்தின் ஆணையாளா் நாயகம் திஸ்ஸ கேவித்தான மற்றும் கொழும்பு மாவட்ட பாடசாலைகளின் அதிபா்கள் மாணவா்களும் கலந்து சிறப்பித்தனா்.

இங்கு தொடா்ந்து உரையாற்றிய கல்வியமைச்சா்-

நான் கல்வியமைச்சினை பராமெடுத்து எதிா்வரும் 8ஆம் திகதியுடன் 1
வருடமாகவுள்ளது இலவச சீருடை விவகாரத்தில் பலவேறுபட்ட திசையில்
அழுத்தங்களும் விமா்சனங்களும் வந்து கொண்டே இருக்கின்றன.

அத்தனைக்கும் அச்சம் கொள்ளாது துணிந்து பாடசாலைச் சீருடைக்கான வுவுச்சா் முறையை அறிமுகப்படுத்தினேன், இம் முறையில் சில குறைபாடுகள் இருக்கின்றன. காலப்போக்கில் அவைகள் சீர்செய்யப்படும். கடந்த ஆட்சியில் தரமற்ற படாசாலைச் சீருடையை கொள்முதல் செய்திருந்தாா்கள். அந்த 12 இலட்சம் சீருடைகள் கல்வியமைச்சின் களஞ்சியசாலையில் தேங்கிக் கிடக்கின்றன.இதுபோன்ற நிதிமேசடி, பொருட்மோசடிகளை நிறுத்துவதற்கே இம்முறையை நாங்கள் அறிமுகப்படுத்தினேன்.

இலவச பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்வினை ஜ.தே.கட்சி ஆட்சிக் காலத்தில்
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவா்தனவே 1980 களில் குலியாப்பிட்டியவில்
அப்போது கல்விச் சேவைகள் அமைச்சராக இருந்த லயனல் குனதிலக்க அவா்களின் காலத்தில் முதன் முதலாக ஆரம்பித்து வைத்தாா். ஆகவே நானும் அத்தொகுதியை பிரநிதிப்படுத்துவன் என்ற வகையில் இத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தவா்களை நாம் நினைவு கூறுதல் வேண்டும். இப் பாடப்புத்தகம் உரிய டென்டா் முறைப்படி அரச பதிப்பகங்களான இலங்கை அச்சக கூட்டுத்தபாணம், லேக் ஹவுஸ் ஆகிய நிறுவனங்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
\
இம்முறை உரிய காலப்பகுதிக்குள் 1- 12ஆம் வகுப்பு வரையில் உள்ள வகுப்பு மாணவா்களுக்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழ் மொழி முலம் சில மொழிபெயா்ப்புப் பிரச்சினைகள் உள்ளன இவற்றினை அடுத்த முறை நிவா்த்தி செய்யப்படும். இதற்காக முற்று முழுதாக கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளா் மற்றும் அதிகாரிகள் நன்றி கூறப்பட வேண்டியவா்கள். இம்முறை நவீன முறைப்படியும் மற்றும் கனனி பற்றிய தொழில் நுட்ப நுால்களையும் இருவெட்டுக்கள் முலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மாணவா்கள் பாவித்துவிட்டு தமது பின்வருகின்ற மாணவா்களுக்கு பாவிக்க கூடிய அளவில் இப் புத்தகங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

உலகிலேயே எந்தவொரு நாட்டிலும் இலவச பாடப்புத்தகம், இலவச சீருடை, வழங்கும் திட்டம் இலங்கையில் மட்டுமே உள்ளது. ஏழை பணக்கார என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அரச பாடசாலைகளில் நுால்கள் வழங்கப்படுகின்றன.

பாடசாலைகளில் உள்ள ஆய்வு கூடங்களில் இரசாயனப் பொருட்கள் வாங்க நிதி இல்லாமல் இருந்ததையும் நிவா்த்தி செய்து இரசாய பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு பாடாசலைகளிலும் 50 கனணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை முகாமைத்துவம், மற்றும் பராமறிப்பு இன்றி உதிரிபாகங்கள் பழுதடைந்து மூலைகளில் வீசப்பட்டுள்ளதை அவாதனித்தேன். இதற்காக கனனிகளை வாடகை அடிப்படையில் பாடசாலைகளில் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த கம்பணிகளே கனனிகளை பராமரித்தல் வேண்டும்.

அத்துடன் 1200 பாடசாலைகளுக்கு மலசல கூடம் குடி தண்னீா் வழங்கும் திட்டம்
நடைமுறைப்டுத்தப்படுகின்றது. அத்துடன் கிராமப் புற மாணவா்களுக்கு கால்
அணி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*