ஐக்கிய சதுக்கத்தில் அமானா வங்கி; புதுப் பொலிவு காண்கிறது கல்முனை; முதல்வருக்கு புகழாரம்!

Aslam moulanaAslam moulana (1)

(அஸ்லம் எஸ்.மௌலானா)

அமானா வங்கியின் 25ஆவது கிளை இன்று வியாழக்கிழமை கல்முனை நகர ஐக்கிய சதுக்க வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மட் அஸ்மீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வரின் சார்பில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன்போது வங்கியின் கொடுக்கல் வாங்கல்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் வாகனத்தில் அமர்ந்திருந்தவாறே பணப்பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கான தன்னியக்க பணப்பரிமாற்ற நிலையமும் (ATM) திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் சில மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் வங்கியின் பிரதித் தலைவர்களான எம்.எம்.எஸ்.குவைலிப், இர்ஷாத் ஹலால்தீன், கிளை முகாமையாளர் ஏ.எம்.நபீல், மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ், மாநகர முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக், கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் உட்பட வர்த்தக பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கல்முனை நகரை அழகுபடுத்தி, பொலிவடையச் செய்யும் பொருட்டு கல்முனை மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்களின் கருத்திட்டத்தில் உருவான ஐக்கிய சதுக்கத்தில் வர்த்தகத்துறையை மேம்படுத்துவதற்காக அவர் விடுத்த அழைப்பின் பேரில் இக்கிளையைத் திறக்க தமது நிறுவனம் முன்வந்ததாக அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மட் அஸ்மீர் இந்நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

கல்முனை நகரில் ஐக்கிய சதுக்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் முற்றத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் வயோதிபர்கள் உட்பட பயணிகளின் நலன் கருதி பஸ் தரிப்பு நிலையம் ஒன்றை அமைத்துத் தருமாறு முதல்வர் விடுத்த அழுத்தமான வேண்டுகோளை தட்டிக்கழிக்க முடியாமல், அதனை ஏற்று நாட்டில் நாம் வேறு எங்கும் அமைத்திராத வகையில் நவீன பஸ் தரிப்பு நிலையம் ஒன்றை இங்கு அமைத்தோம்.

அதன் பின்னர் கல்முனைக்குடியில் அமானா வங்கியின் ஒரு கிளை இருக்கத்தக்கதாக முதல்வரின் அழைப்பை ஏற்று இப்புதிய கிளையையும் கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக வாகனத்தில் அமர்ந்திருந்தவாறே பணப்பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கான தன்னியக்க பணப்பரிமாற்ற நிலையத்தையும் இங்கு நிறுவியுள்ளோம்.

இதன் மூலம் கல்முனை மக்களையும் வர்த்தகர்களையும் நாம் கௌரவித்துள்ளோம். எமது இவ்வங்கிக் கிளையின் வளர்ச்சி வர்த்தகர்களினதும் மக்களினதும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது.

அந்த வகையில் கல்முனைப் பிராந்தியத்தின் பொருளாதார எதிர்காலம் தொடர்பில் மிகவும் தூர நோக்கில் சிந்தித்து, இதற்கு வழி வகுத்த முதல்வர் நிஸாம் காரியப்பர் அவர்களுக்கு மிகவும் நன்றியையும் பாராட்டையும் எமது நிறுவனத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய மாநகர சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மட் அஸ்மீர் மேலும் குறிப்பிட்டார்.

20160114_09270420160114_09374920160114_095929 20160114_102110 20160114_101355Aslam moulana (4) 20160114_101450 20160114_10155720160114_101744 20160114_101805 20160114_101855 20160114_101935 Aslam moulana (3) 20160114_092412 20160114_092504 20160113_131519 20160114_09192320160114_103700

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*