கல்முனை மாநகர சபையில் சுதந்திர தின நிகழ்வு!

20160204_085859

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாநகர சபை முன்றலில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.எச்.எச்.எம்.நபார், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், பொறியியலாளர் எம்.சர்வானந்தன், முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் உட்பட மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மாணவர்களினால் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதுடன் சுதந்திர தின சிறப்புரைகளும் நிகழ்த்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*