கிழக்கில் பல இடங்களில் சுதந்திர தின நிகழ்வுகள்!

DSC03445

கல்முனை பிரதேச செயலகத்தில்..

(எம்.ஐ.சம்சுதீன்)

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வு நேற்று வியாழக்கிழமை செயலக முன்றலில் பிரதேச செயலாளர் எம்.எச்.கனி தலைமையில் நடைபெற்றது.

இதில் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

DSC03449

கல்முனை ஸாஹிரா கல்லூரியில்..

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

இலங்கையின் 68 வது சுதந்திரதின நிகழ்வுகள் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றது.

தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கல்லூரி பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர்.

zc 68 1zc 68 3

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில்..

(யூ.கே.காலித்தீன்)

“ஒரே நாடு பெரும் சக்தி” எனும் தொனிப்பொருளில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 68வது சுதந்திர தின நிகழ்வும், புனர் நிர்மாணம் செய்யப்பட வெளி நோயாளர் பிரிவும் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(04) சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், விசேட அதிதிகாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ. மஜீட், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல். அலாவுதீன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.பஷீர் ஆகியோர் உட்பட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

20160204_10415320160204_104415

சம்மாந்துறையில் கோலாகல கொண்டாட்டம்..

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறைப் பொலிஸாரும், சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை , நிந்தவூர், காரைதீவு பிரதேச சிவில் சமூகமும் ஏற்பாடு செய்த 68வது சுதந்திர தின விழாவும் ஊர்வலமும் இன்று (04) சம்மாந்துறை ஹிஜ்றா சந்தி மணிக்கூட்டுக் கோபூர சந்தியிலிருந்து ஆரம்பமாகி சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபம் வரைக்கும் சென்று அங்கு பல நிகழ்வுகள் நடைபெற்றன.

சும்மாந்துறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபூல் பிரயலால் தலைமையில் நடைபெற்ற இந்த சுதந்திர தின விழாவில் பிரதம அதீதியான சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் டீ.ஆர்.எல்.ரணவீர கலந்து கொண்டார்.

மேலும் அதீதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ;ஷேய்க் எம்.ஐ.அமீர், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், கல்முனைப் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.டீ.ஹேமந்த, சம்மாந்துறைப் பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம், கெப்சோ நிறுவனத்தின் பணிப்பாளர் காமில் இம்டாட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தின் போது சிவில் அமைப்பக்களின் செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ்களும் வழைங்கி வைக்கப்பட்டன.

040308 06

முஹாசபா மீடியா நெட்வொர்க் 

(ஜுனைட்.எம்.பஹ்த்)

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தையொட்டி முஹாசபா மீடியா நெட்வொர்க் சுதந்திர தினத்தில் பங்கெடுக்கும் வகையில் காத்தான்குடி பிரதான வீதியில் ஸ்டீக்கர் ஒன்றினை வாகனங்களில் ஒட்டி நாட்டுக்கும் நாட்டு மாக்களுக்கும் தங்களது பங்களிப்பை வெளிக்காட்டினார்கள்..

“தாய் மண்ணை நேசிப்போம்.. ஒற்றுமையை நிலை நாட்டுவோம்..” எனும் தொனியில் ஸ்டீக்கர்கள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

IMG-20160204-WA0002 IMG-20160204-WA0009

அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில்

(ஜி,முஹம்மட் றின்ஸாத்)

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

57

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*