கலாநிதி ஜெமீல் முன்னிலையில் சாய்ந்தமருதில் ACMC கிளைகள் அங்குரார்ப்பணம்!

IMG-20160215-WA0003

சாய்ந்தமருது பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கிளைகளை நிறுவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான இரண்டு கிளைகள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது-05 மற்றும் 07 ஆகிய இரண்டு பிரிவுகளுக்குமே புதிய கிளைகள் அமைக்கப்பட்டு, நிர்வாகத் தெரிவுகள் நடைபெற்றன.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருது 5ஆம் பிரிவு கிளையின் தலைவராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது 5ஆம் பிரிவின் முன்னாள் தலைவர் எம்.ஐ.அலியார் அவர்களும், செயலாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அடிப்படை போராளியும் முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினருமான எம்.வை.சித்தீக் (சமுர்த்தி உத்தியோகத்தர்), பொருளாளராக மக்கள் வங்கி அலுவலர் ஏ.கபீர், உப தலைவர்களாக ஏ.எம்.யூசுப், எம்.ஐ.அஸீஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் மேலும் ஐவர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்

அதேவேளை சாய்ந்தமருது 7ஆம் பிரிவு கிளையின் தலைவராக சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, செயலாளராக முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர் ஐ.எல்.ஏ.ராசிக், பொருளாளராக டி டி லங்கா நிருவனதின் தவிசாளர் ஏ.எல்.ஜஹான், உப தலைவர்களாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த போராளியும் மர்ஹூம் அஷ்ரப் காலத்தில் சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழு தலைவராகவும் இருந்த எம்.ஐ.எம்.முஸம்மில் அவர்களும், பிரபல வர்த்தகர் ஏ.எச்.எம்.ஹாரூன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதுடன் மேலும் ஐவர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தொடர்பு அதிகாரியும், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான ஏ.எல்.ஜஹான் மற்றும் கலாநிதி ஜெமீலின் பொதுசனத் தொடர்பு அதிகாரி எஸ்.ஏ.வஹாப் உட்பட கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேபோன்று சாய்ந்தமருதில் ஏனய 15 கிராம சேவகர் பிரிவகளுக்கும் விரைவில் கட்சிக் கிளைகள் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கட்சிக் கிளைகளில் அங்கத்துவம் பெறுவதற்கு இளைஞர்கள், யுவதிகள், கல்விமான்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் மறைவுக்குப் பின்னர் கிராம மட்டத்தில் கட்சி ஒன்றின் கிளைகள் புனரமைக்கபடுவது இதுவே முதல் தடவை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிப் போராளிகள் மகிழ்ச்சி தெரிவிப்பதுடன் இதற்காக தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஆகியோருக்கு நன்றியும் தெரிவிக்கின்றனர்.

IMG-20160216-WA0002IMG-20160215-WA0002 IMG-20160215-WA0001 IMG-20160215-WA0004 IMG-20160216-WA0001 IMG-20160216-WA0003 IMG-20160216-WA0004

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*