ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி காலமானார்!

671470223UN

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பூத்ரோஸ் பூத்ரோஸ் காலி தனது 93ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

எகிப்தியரான இவர், அந்நாட்டு தலைநகர் கெய்ரோவில் உள்ள மருத்துவனையில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1992ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 6வது பொதுச் செயலாளராக பதவியேற்ற அவர், ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவி வகித்த முதலாவது அரேபியராவார்.

1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரக அவர் பதவியேற்றப்போது, உலக நாடுகள் முதலாவது வளைகுடா போரை சந்திந்திருந்தன.

யூகோஸ்லாவியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளின் உள்நாட்டு போர் மற்றும் வளைகுடாவில் தொடர்ந்த அமைதியின்மையையும் உடனடி பிரச்சினையாக அவர் எதிர்கொண்டார்.

பொஸ்னியா மீதான நேட்டோவின் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் அமெரிக்காவின் கோபத்திற்கும் உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*