இலங்கையின் பொருளாதாரத்திற்கு உயர்ந்தபட்ச பங்களிப்புச் செலுத்தக்கூடிய வல்லமையில் அமானா வங்கி!

????????????

 

அமானா வங்கியின் வரிக்கு முந்திய இலாபம் 218 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பு! 

தொழிற்பாட்டு வருமானம் 2 பில்லியன் ரூபாவையும் கடந்து 31% ஆல் வளர்ச்சி  

அமானா வங்கி 2014ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இருந்து இலாபம் ஈட்டத் தொடங்கியதிலிருந்து 2015ம் ஆண்டை முழு இலாபம் ஈட்டிய ஆண்டாக பதிவுசெய்துள்ளது. வெளியிடப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்கு அமைய, இந்த வங்கி 2015ம் ஆண்டில் 218.7 மில்லியன் ரூபாவை வரிக்கு முந்திய இலாபமாக பெற்று சாதனை படைத்துள்ளது. 2014ம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட வரிக்கு முந்திய 80.2 மில்லியன் ரூபா நட்டத்துடன் ஒப்பிடும்போது இது 372.5% வளர்ச்சியாகும்.

2015ம் ஆண்டில் வங்கியின் மொத்த நிதியளிப்பின் மூலமான வருமானம் 2.9 பில்லியன் ரூபாவை எட்டியுள்ள அதேவேளை, அதன் நிகர வருமானம் 1.5 பில்லியன் ரூபாவாகும். இது முந்திய வருடத்துடன் ஒப்பிடும்போது 22.4% வளர்ச்சியாகும். 2015ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டுக்கான நிகர தொழிற்பாட்டு வருமானம் 2 பில்லியன் ரூபாவையும் தாண்டி 31.1% ஆன வளர்ச்சியை காட்டுகின்றது. செலவைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மொத்த தொழிற்பாட்டு செலவினத்தை 1.7 பில்லியன் ரூபாவாகக் கட்டுப்படுத்த முடிந்தது. இது அதற்கு முந்திய வருடத்தையும் விட 7.5% வளர்ச்சியாகும்.

வங்கியின் வளர்ச்சியடைந்து வரும் பிரபல்யம் மற்றும் அங்கீகாரம் காரணமாக குறிப்பிட்ட வருடத்தில் வாடிக்கையாளர் வைப்புக்கள் 38.6 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. இது 32.1% வளர்ச்சியாகும். வாடிக்கையாளர் நிதியளிப்புத் தொகை 33.1 பில்லியன் ருபாவை அடைந்து 30.1% வளர்ச்சியை காட்டுகின்றது.

இவ்வாறான வளர்ச்சியானது 2015ம் ஆண்டில் வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 47.9 பில்லியன் ரூபாவினை அடைந்து 37.2% ஆல் அதிகரிக்க துணைபுரிந்தது. அந்த ஆண்டின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க விடயம்தான், செயற்படா நிதியளிப்பு விகிதம் ஆண்டு முழுவதிலும் மட்டுப்படுத்தப்பட்டமையாகும்.

இது நிதியளிப்பின் தரம் விட்டுக்கொடுக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தியது. மொத்த செயற்படா நிதியளிப்பு விகிதம் 2015ம் ஆண்டின் நிறைவில் 0.92மூ ஆக காணப்பட்டது. இவ்விகிதம் வங்கி மற்றும் நிதித்துறையில் மிகவும் குறைந்த அளவில் பேணப்பட்டு வரும் ஒன்றாக விளங்குகின்றது.

அமானா வங்கியின் இதுவரையான பயணம் குறித்து கருத்து வெளியிட்ட ஸ்தாபகத் தலைவர் திரு. ஒஸ்மான் காசிம் அவர்கள் ‘ இலங்கையின் முதலாவது இஸ்லாமிய வங்கியை உருவாக்குவதென்பது ஒரு காலத்தில் Osman Kassim - Chairman Amana Bankதொலைநோக்காகவும், ஒரு கனவாகவுமே இருந்தது. இப்போது இந்த தொலைநோக்கு உணரப்பட்டுள்ளதையும், இன்று அடைந்திருக்கும் வெற்றியையும் கண்டு நான் உண்மையில்   மகிழ்ச்சியடைகின்றேன்.

இதனை சாதிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நிறுவனத்தை பாதுகாத்து வரும் பணியாளர்கள், முகாமைத்துவக் குழு, பிரதம நிறைவேற்று அதிகாரி, பணிப்பாளர்கள் சபை ஆகிய அனைத்துத் தரப்புக்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். குறுகிய காலத்திற்குள் அமானா வங்கி அடைந்துள்ள வளர்ச்சியும், இலாபமும் உண்மையில் அரசாங்கமும், ஒழுங்குபடுத்துனர்களும், பங்குதாரர்களும் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலப்படுத்தும். எமது பயணத்தில் முதலாவது மைல்கல்லையே நாம் இப்போது கடந்திருக்கின்றோம்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு உயர்ந்தபட்ச அளவில் பங்களிப்புச் செலுத்தக்கூடிய வல்லமையை பெறக்கூடிய அளவுக்கு அமானா வங்கி எதிர்காலத்தில் முன்னேறும் என்ற நம்பிக்கையும், ஆர்வமும் எனக்கு உண்டு. அதேபோல், மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவை இவ்வங்கியின் வெற்றியின் முதுகெலும்பாக அமையும்’ எனக் குறிப்பிட்டார்.

Mohamed Azmeer - CEO Amana Bankஇதுவரை அமானா வங்கி சாதனை பற்றி கருத்து வெளியிட்ட வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. முஹம்மத் அஸ்மீர் அவர்கள் ‘ வங்கியை நட்டத்திலிருந்து இலாபமீட்டும் நிலைக்கு மாற்றியவர்களில் ஒரு பங்காளியாக நான் இருந்திருப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். தற்போதுள்ள சந்தை சூழ்நிலைகளிலும், நாம் சந்திக்க நேர்ந்த பல்வேறு சவால்கள் மத்தியிலும் ஒரு புதிய வங்கி என்ற வகையில் 218 மில்லியன் ரூபாவை வரிக்கு முந்திய இலாபமாக பெறுவதென்பது இலகுவான காரியமல்ல. எமது வெற்றிக்கான பிரதான காரணம் எமது வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியின் மூலோபாய திட்டத்திற்கமைய செயற்பட்ட எமது ஊளியர்களுமாவர்.

இந்த முன்னேற்றத்தை அடைவதற்கு துணைபுரிந்து பிரதான விடயங்களாக வர்த்தக கூட்டிணைவு, வாடிக்கையாளர் சேவை, செயற்பாட்டு விருத்தி, செலவு கட்டுப்பாடு, வளங்களின் அதிகரிப்பு, இடர் முகாமைத்துவம் போன்ற காரணிகளை குறிப்பிடலாம். எதிர்காலத்தில் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், இந்த வளர்ச்சி உத்வேகத்தை 2016ம் ஆண்டிலும், அதற்குப் பின்னரும் தொடர்ந்தும் நிலைநிறுத்துவதற்கான வல்லமை எம்மிடம் உள்ளது என்ற நம்பிக்கை எனக்குண்டு’ எனக் குறிப்பிட்டார்.

வட்டிசாராத இஸ்லாமிய வங்கியியல் துறையுடன் முற்றிலும் இணங்கி செயற்பட்டு வரும் இலங்கையின் முதலாவது உத்தரவுபெற்ற வர்த்தக வங்கியான அமானா வங்கி கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் திரிசவி சபையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட பிட்ச் தரவரிசைக்கு அமைய டீடீ(டமய) இல் வங்கியின் நீண்டகால தேசிய தரப்படுத்தலை உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டுக்கு இணைவாக 2014ம் ஆண்டில் அமெரிக்காவின் வொஷpங்டன் நகரில் நடைபெற்ற 18ஆவது வருடாந்த உலகின் மிகச் சிறந்த வங்கிகளைத் தெரிவு செய்யும் விருது விழாவில் குலோபல் பைனான்ஸ் சஞ்சிகையினால் உலகில் முன்னேறி வரும் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கியாக அமானா வங்கி அங்கீகரிக்கப்பட்டது.

தனது மூலோபாய பங்காளிகளான மலேஷpயா பேர்ஹாட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேஷpன் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு,  நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.

2015ம் ஆண்டில் சாதித்தவை

  • நிதி வருமானம் 2,886 மில்லியன் ரூபாவை எட்டியமை (முந்திய வருடத்தையும் விட 19.9% வளர்ச்சி
  • நிகர தொழிற்பாட்டு வருமானம் 2064 மில்லியன் ரூபா, இது முந்திய வருடத்தையும் விட 31.1% வளர்ச்சியாகும்.
  • வரிக்கு முந்திய வருமானம் 218 மில்லியன் ரூபா, இது முந்திய வருடத்தையும் விட 375.5% வளர்ச்சியாகும்.
  • வாடிக்கையாளர் முற்பணத் தொகை 33,074 மில்லியன் ரூபா, இது முந்திய வருடத்தையும் விட 30.1% வளர்ச்சியாகும்.
  • வாடிக்கையாளர் வைப்புக்கள் 38,608 மில்லியன் ரூபா. இது முந்திய வருடத்தையும் விட 32.1% வளர்ச்சியாகும்.
  • மொத்த செயற்படா நிதியளிப்பு விகிதம் 0.92% ஆகும்.
  • வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 47,882 மில்லியன் ரூபாவாகும். இது முந்திய வருடத்துடன் ஒப்பிடும்போது 37.2% வளர்ச்சியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*