சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

1 (1)

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்)

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் பிரதமர் அளித்த வாக்குறுதியை விரைவாக நிறைவேற்றுமாறு கோரும் தீர்மானம் ஒன்று சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுகூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (13) விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதி அமைச்சர் ஹரீஸ் இத்தீர்மானத்தை முன்மொழிய கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் வழிமொழிந்தார்.

இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவிக்கையில்;

“சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகின்ற தனியான உள்ளுராட்சி சபையை பெற்றுக் கொடுப்பதற்கான சகல விதமான முன்னெடுப்புக்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றது.

சிலர் தங்களது அரசியல் செல்வாக்கை உயர்த்துவதற்காக கௌரவ அந்தஸ்த்தில் இருக்கும் பிரதமருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தொடர்பில் பிரதமரிடம் முறையிடவுள்ளோம்.

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காகவே பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றி, அதனை பிரதமர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பவுள்ளோம்” என்றார்.

பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் உரையாற்றுகையில்;

“கடந்த வருடம் ஆகஸ்ட் 09ஆம் திகதி கல்முனை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளித்திருந்த வாக்குறுதியை ஞாபகமூட்டுவதுடன் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம்” என்றார்.

3 (1)4 (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*