சாய்ந்தமருதில் சேகரிக்கப்பட்ட நிதி, நிவாரணப் பொருட்கள் ஜம்மியத்துல் உலமாவிடம் கையளிப்பு!

A (3)

வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பொருட்டு சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் சேகரிக்கப்பட்ட நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடம் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏயலகத்தில் வைத்து அதன் செயலாளர் மௌலவி எம்.எம்.எம்.முபாறக், பொருளாளர், ஏ.எல்.எம்.கலீல் ஆகியோர் இவற்றைக் கையேற்றனர்.

இதன்போது சேகரிக்கப்பட்ட ஒரு லொறி அடங்கிய சுமார் 30 இலட்சம் பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், புதிய ஆடைகள் மற்றும் 15 இலட்சத்து 19000 ஆயிரம் ரூபா பணத்திற்கான காசோலை என்பன சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா தலைவரும் பள்ளிவாசல் உப தலைவருமான மௌலவி யூ.எல்.எம்.காசிம் தலைமையிலான குழுவினரால் கையளிக்கப்பட்டன.

இக்குழுவில் உலமா சபை பிரதிநிதியாக மௌலவி எம்.ஐ.எம்.ரௌபீன், சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளர் அப்துல் மஜீத்(ரோஷன்), பள்ளிவாசல் மரைக்காயர்களான எம்.எம்.அஹமட்லெப்பை (முன்னாள் அதிபர்) ரவ்சூக் (வெல்கம்), அப்துல் மஜீத் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.தில்சாத், மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் எஸ்.எம்.கலீல், வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் எம்.எம்.சத்தார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

IMG-20160524-WA0020IMG-20160524-WA0017IMG-20160524-WA0023IMG-20160524-WA0021A (4)A (1) A (2) A (6)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*