வாகனங்களின் விலை அதிகரிப்பு; முச்சக்கர வண்டிக்கு வரி மாத்திரம் 400,000 ரூபா!

car

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டதால் வாகனங்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்சிகே இதனைக் கூறியுள்ளார்.

அதன்படி 1000cc இற்கு மேற்பட்ட வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.

வேன் மற்றும் லொறிகளின் விலை அதிகரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிகரிப்பு விபரங்கள் வருமாறு,

முச்சக்கர வண்டிக்காக வரி மாத்திரம் 400,000 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

டொயோட்டா ப்ரியஸ் (Toyota Prius) வகை காருக்கான வரி 3,300,000 ரூபாவில் இருந்து 7,200,000 வரை அதிகரிக்கிறது.

நிசான் எக்ஸ் ட்ரயல் (Nissan X-trail) 4,000,000 ரூபா வரியில் இருந்து 8,000,000 வரை அதிகரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*