திடீர் மழையினால் மண்சரிவு; பாதை பிளவு!

Daily_News_3234478235245

தமிழ்நாடு மணப்பாக்கம் பகுதியில் திடீர் மழையினால் மண்சரிவு ஏற்பட்டு பாதை ஒன்று பிளவடைந்துள்ளது.

தமிழ்நாடு மணப்பாக்கம் மெயின் ரோட்டில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இக்கட்டிடங்கள் தரை மட்டத்தில் இருந்து 15 அடி தாழ்வாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின்போது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால், சாலையில் அரிக்கப்பட்ட மணல் திட்டுகள் இக்குடியிருப்பு பகுதியில் குவிந்துள்ளது.இதனால், இக்குடியிருப்புகளை சுற்றிலும் மிக உயரமான கான்கிரீட் மதில்சுவர் எழுப்பும் பணி நடந்து வருகிறது. ஒரு பகுதியில் பணி முடிந்த நிலையில், மற்றொரு பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் கடந்த ஒரு வாரமாக பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் இங்கு சாலையோரமாக இருந்த மணல் திட்டுகள் சரிந்து, நேற்று அதிகாலை இக்குடியிருப்பு பகுதியி விழுந்தது. தகவலறிந்து வந்த அதிகாரிகள், அவ்வழியாக கனரக வாகன போக்குவரத்தை தடை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*