சிகரட் விற்பனையை முற்றாக நிறுத்த முன்வந்த கண்டி கல்கமுவ முஸ்லிம் வர்த்தகர்கள்!

kandy-எம்.எம்.எம். ரம்ஸீன்-

கண்டி, கெலிஓயா கலுகமுவ முஸ்லிம் கிராமத்தில் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் சிகரட் விற்பனையை நிறுத்திக் கொள்வதற்கு முன் வந்துள்ளனர்.

இப்பகுதி வர்த்தக நிலையங்களில் சிகரட் விற்பனை இடம்பெற்று வந்த நிலையில் இளைய தலைமுறையினரின் நன்மை கருதி சிகரட் விற்பனையை நிறுத்திக் கொள்ளுமாறு சமூகநலன் விரும்பிகள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

எனவே, சிகரட் விற்பனையை உடனடியாக நிறுத்திக் கொள்வதாக கலுகமுவை பகுதியிலுள்ள 26 வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கலுகமுவ மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு எழுத்து மூலம் உறுதியளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*