நாளை திருமண பந்தத்தில் இணையவிருந்த காதல் ஜோடி சடலங்களாக மீட்பு!

article_1467010863-body

காணாமல் போனதாகக் கூறப்பட்ட அநுராதபுரத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞனும், பொலன்னறுவையைச் சேர்ந்த 19 வயதான யுவதியும், அநுராதபுரம், புதபிம மஹாபுலன்குளப் பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இன்று திங்கட்கிழமை (27) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், இருவரும், நாளை செவ்வாய்க்கிழமை (28) திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவிருந்ததாகவும், இவ்விருவரும் சடலங்களாக மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக உறவினர்கள், பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*