சவுதியில் இரு புனித தலங்கள் அருகே குண்டுவெடிப்பு!

12249199881

சவுதி அரேபியாவில் மதினா, காடிஃப் ஆகிய இரண்டு நகரங்களில் புனித தலங்கள் அருகில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமியர்களின் புனித தளங்களில் முக்கியமான ஒன்றான மதினாவில், மசூதி அருகே தற்கொலைப் படை குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

அந்நாட்டின் அல்-அரேபியா தொலைக்காட்சி வாகனம் வெடித்து சிதறியதற்கான வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது. விபத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக, காடிஃப் நகரில் மற்றொரு வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. காடிஃப் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் வாழும் பகுதியாகும். ஷியா பிரிவினரின் மசூதியை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல், ஜெத்தா நகரில் உள்ள அமெரிக்க தூதரம் அருகே சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வெடிகுண்டை வெடிக்க செய்து உயிரிழந்தார். இதில் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*