இந்தியாவில் விருது பெற்ற கவிஞர் ஜமீலுக்கு மருதமுனை அல்-மதீனாவில் கௌரவம்!

1-PMMA CADER-18-07-2016

(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் அலுவல உத்தியோகத்தராக் கடமையாற்றும் மருதமுனையைச் சேர்ந்த றகுமான் ஏ ஜமீல் அண்மையில் (2016-07-13) இந்தியாவில் இலக்கியத்திற்கான கவிஞர்கள் திருநாள் விருது பெற்றதை பாரட்டி கௌரவித்த நிகழ்வு நேற்று (18-07-2016) மருதமுனை அல்-மதீனா வித்தியாயலத்தில் அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் விஷேட விருந்தினராகக் கலந்து கொண்டு ஜமீலை வாழ்த்திப் பாராட்டிப் பேசி பொன்னடை போர்த்தி கௌரவித்தார்.

மேலும் உதவி அதிபர் எச்.நைறூஸ்கான்,ஆசிரியர்களான ஏ.எச்.எச்.றகுமான், ஏ.எம்.எம்.றகுமத்துல்லா மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சபை செயலாளர் ஆசிரியர் எம்.எச்.அல்-இஹ்ஸான் உறுப்பினர் எம்.ஏ.எம்.கைதர் ஆகியோரும் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி கௌரவித்தனர்.

மருதமுனையைச் சேர்ந்த கவிஞர் எம்.எம்.நௌபல்,றகுமான் ஏ ஜமீல் ஆகியோர் கடந்த(13-07-2016)இந்தியாவில்’கவிஞர்கள் திருநாள்; விருது’ மற்றும் இந்தி ரூபா தலா 50 ஆயிரம் பணப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் . எம்.எம்.நௌபலின் ‘மிதக்கும் கனவு’றகுமான் ஏ ஜமீலின் ‘தாளில் பறக்கும் தும்பி’ஆகிய கவிதை நூல்களுக்கே இந்த விருதும் பணப்பரிசும் வழங்கப்பட்டது.

கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்த நாளை யொட்டி கவிஞர்கள் திருநாள் நிகழ்வு இன்று(13-07-2016)மாலை மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் டாக்டர் ஏ.ஆர்.லெட்சுமணன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்விலேயே இவர்களுக்கான ‘கவிஞர்கள் திருநாள்; விருது’ மற்றும் இந்தி ரூபா தலா 50 ஆயிரம் பணப் பரிசும் வழங்கப்பட்டது.

அன்;றைய நிகழ்வில் இயக்குணர் இமயம் பாரதிராஜா,மரபின் மைந்தன் முத்தையர்,பேராசிரியை விஜயசுந்தரி ஆகியோரோடு கவிப்பேரரசு பத்மபூஷண் வைரமுத்து விருதுகள் மற்றும் கல்வி நிதி வழங்கி சிறப்புரையாற்றினார்.

2-PMMA CADER-18-07-20163-PMMA CADER-18-07-2016 4-PMMA CADER-18-07-2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*