உலக இஸ்லாம் பொருளாதார மாநாட்டில் ரணில்!

PicsArt_08-01-08.23.10பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தோனேஷியா செல்லவுள்ளார்.

ஜகார்த்தா நகரில் இடம்பெறும் 12வது உலக இஸ்லாம் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளவே அவர் அங்கு செல்லவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2ம் திகதி முதல் 4ம் திகதி வரை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதோடு, உலக இஸ்லாம் பொருளாதார மாநாட்டுக்காக இலங்கை முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 100 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 2500 பேர் இந்த மாநாட்டுக்காக வருகைதரவுள்ளனர்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது விஷேட உரையொன்றையும் ஆற்றவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*