எங்களால் பிரகடனப்படுத்தப்பட்ட ஹக்கீமை தலைவராக ஏற்றுக்கொள்வதா? மகிந்தவால் அடையாளப்படுத்தப்பட்டவர்களை ஏற்றுக்கொள்வதா?

PicsArt_08-20-01.55.52

-M .Y அமீர்-

மிக இக்கட்டான இந்தகாலகட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிந்தனையில் இல்லாத ஒருவிடயாமான, நீதிமன்றத்தின் தீர்ப்பினூடாக எப்போதே பிரிந்து செயற்படும் வடக்கையும் கிழக்கையும் இணைக்கப்போவதாகவும், அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் சில விலாசமில்லாத புல்லுருவிகள், கூவித்திரிவதாகவும் அவர்களது கூற்றில் முஸ்லிம் காங்கிரஸைப் பலவீனப்படுத்துவதும், அதனைத்தொடர்ந்து இனமோதல்களை ஏற்படுத்தி அதனூடாக தங்களது சுயநல அரசியலை செய்ய முனைவதும், என்ற அஜந்தாவைத் தவிர வேறு ஒன்றுமில்லை. என்று கிழக்குமாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரீப் சம்சுடீன் தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ.பஷீர் தலைமையில், 2016-08-19 ஆம் திகதியன்று சாய்ந்தமருதில் இடம்பெற்ற இளைஞர் சந்திப்பு ஒன்றுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே மாகாணசபை உறுப்பினர் ஆரீப் சம்சுடீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு தற்போது பிரிந்தே இருக்கின்றது ஆகவே இணைப்பைப்பற்றி நாங்கள் பேசவேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை. அதேபோன்று வடக்கையும் கிழக்கையும் இணைப்பதென்றால் பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை இவைகள் எல்லாம் நடக்கக்கூடிய விடயமல்ல. இல்லாத ஒன்றைக்கூறிக் கொண்டு இனமுறன்பாடுகளையே உண்டாக்க சிலர் முனைகின்றனர். இது ஆரோக்கியமான செயட்பாடுமல்ல என்றும் இவ்வாறானவர்களை எச்சரிப்பதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி, ஆயுதப்போராட்டத்துக்குள் நுழைய இருந்த இளைஞர்களை அரசியல் நீரோட்டத்துக்குள் உள்வாங்கி அவர்களை ஜனநாயக வழியில் அழைத்துச்செல்வதற்காக உருவாக்கப்பட்ட கட்சி என்றும் அப்போது மர்ஹும் அஷ்ரப் இருந்தார். இப்போது றவூப் ஹக்கீம் இருக்கிறார்.

நாளை உங்களைப்போன்ற இளைஞர் ஒருவர் இந்தக்கட்சியை தலைமைதாங்கி நடத்திச்செல்வர். ஆனால் வேறு கட்சிகளோ குறித்த இந்த இருவரும் இல்லாது போனால் இருந்த இடம்தெரியாது அழிந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

எனவே இலங்கையில் வாழும் அநேக முஸ்லிம்களின் நன்மதிப்பையும் சர்வதேசத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஷை பாதுகாக்க, இளைஞர்கள் ஒன்றுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இன்னும் சிலர் கிழக்கு என்றும் ஏனைய பிரதேசங்கள் என்றும் பிரதேசவாத நச்சுக்கருத்துக்களை மக்கள் மத்தியில் துவி, கிழக்குமக்களை ஏனைய பிரதேச மக்களிடமிருந்து தூரப்படுத்த முனைகின்றனர்.

இது மிகுந்த அபாயகரமானதொரு விடயமாகும். டயஸ்போராக்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டு, இலங்கை முஸ்லிம்களை கிழக்கு என்றும் ஏனைய பிரதேசங்கள் என்றும் பிரித்து, அதிலும் முஸ்லிம்களை பலவீனப்படுத்தும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. எனவே நாளைய தலைவர்களான இளைஞர்கள் இந்த விடயங்களிலும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கடந்தகால கசப்பான அனுபவங்களின் பின்னர் இனங்களுக்கிடையே தற்போது ஓரளவு சுமூகநிலை உருவாகிவரும் இச்சந்தர்ப்பத்தில் சில வங்குரோத்து அரசியல்வாதிகள் இன்னும் வீராவேசம் பேசி, இன ஒற்றுமையை சீர்குலைக்க முனைவது கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.

இப்போது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கேள்வி ஒன்றுள்ளது அது என்னவென்றால் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களால் பலசந்தர்ப்பங்களில் அடையாளம் காட்டப்பட்டு, எங்களால் பிரகடனப்படுத்தப்பட்ட றவூப் ஹக்கீமை தலைவராக ஏற்றுக்கொள்வதா? அல்லது மகிந்தவால் அடையாளப்படுத்தப்பட்டவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்வதா? என்ற விடயம்.

இளைஞர்கள் தவறான வழிகாட்டலுக்குள் சென்றுவிட்டால் எதிர்காலத்தில் கைசேதப்படவேண்டியும் வரலாம். இன்றைய இளைஞர்கள் புத்திசாதுரியமானவர்கள், அவர்கள் தவறான முடிவுக்குள் செல்லமாட்டார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னை இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக நியமித்துள்ளபோதிலும், தான் இளைஞர்களுக்குள்ளேயே இருந்து தலைவர்களை, அவர்களுடாகவே தெரிவுசெய்து குறித்த தலைவருக்கும் கட்சிக்குமிடேயேயான இணைப்பாளராக செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நிகழ்வின்போது காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் எம்.எச்.எம்.இஸ்மாயில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்தியகுழுவின் செயலாளர் எம்.எம்.எம்.றபீக் ஆகியோரும் உரையாற்றினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*