பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை!

263208189Untitled-1

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகாவின் தந்தை- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு ஒக்டோபர் 8ம் திகதி முல்லேரியா – வல்பொல சந்தியில் வைத்து, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலப் பகுதியில் இடம்பெற்ற இந்தக் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் கடந்த ஜூலை 14ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் இன்று, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன்படி குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, அனுர துஷார டிமெல், சமிந்த ரவி என அழைக்கப்படும் தெமட்டகொட சமிந்த, சரத் பண்டார மற்றும் பிரயந்த ஜானக பண்டார ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரயந்த ஜனக பண்டார வழக்கு விசாரணைகளில் ஆஜராகாது தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*