கண்டியில் குடி நீர்ப் பிரச்சினையை தீர்க்கும் நடமாடும் சேவை

14463163_1881342438765762_8610756026900936358_n

கண்டி மாவட்ட மக்களின் குடி நீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையிலான நடமாடும் சேவை இன்று வியாழக்கிழமை மற்றும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீமின் ஆலோசனைக்கமைய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதனை ஏற்பாடு செய்துள்ளது.

29ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணிக்கு கட்டுகஸ்தோட்டை குஹாகொட வீதியில் உள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அலுவலகத்திலும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணிக்கு கெடம்பே பேராதனை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அலுவலகத்திலும் இந்த நடமாடும் சேவை இடம்பெறும்.

இதில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷணி பெர்ணாந்து புள்ளே, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், பிரதித் தலைவர் ஷபீக் ரஜாப்தீன், நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹிலால் சில்வா உட்பட உயரதிகாரிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*