ஹரீஸ் இல்லா விட்டால் கல்முனை சந்தாங்கேணி மைதானம் இருண்டதாகவே நீடித்திருக்கும்!

z-ksg-9

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானம் 375 மில்லியன் ரூபா செலவில் அனைத்து வசதிகளும் கொண்ட மைதானமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற மேற்படி மைதானத்தின் புனரமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நடும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“மாகாணத்திற்கு ஒரு மைதானம், மாவட்டத்திற்கு ஒரு மைதானம் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட மைதாங்கள், சகல வசதிகளும் கொண்ட மைதானமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது அறிமுகம் செய்யப்பட்டது. அதற்காக அவருக்கும் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமே ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதன் பிரகாரம் அப்போது அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகர மைதானம் அதற்காக தெரிவு செய்யப்பட்டு, அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்முனை விளையாட்டு மைதானமும் இப்போது அத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. இதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நாம் முன்னெடுத்த பேச்சுவார்த்தையின் பயனாக அதற்கான நிதியொதுக்கீடுகளை கட்டம் கட்டமாக ஒதுக்கீடு செய்வதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பிக்கப்படுகின்ற இந்த விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் அடுத்த வருட இறுதிக்குள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு, அனைத்து வசதிகளும் கொண்ட மைதானமாக இது பிரகாசிக்கும். இந்த முயற்சியில் பிரதி அமைச்சர் ஹரீஸ் ஈடுபட்டிருக்கா விட்டால் இம்மைதானம் தொடர்ந்தும் இருண்டதாகவே நீடித்திருக்கும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தற்போது நல்லாட்சியில் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற ரீத்தியில் இனவாதங்களுக்கு அப்பால் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து இன மக்களும் இலங்கையர் என்ற ரீதியில் ஒற்றுமைப்பட்டு வேண்டும். அப்போதுதான் நிரந்தர சமாதான சூழலை கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் நாடும் நாட்டு மக்களும் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும்” என்றார்.

z-ksg-10z-ksg-7 z-ksg-1 z-ksg-3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*