சவூதி அரேபிய இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

tamilnews_3518335223198

சவூதி அரேபிய இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துர்க்கி பின் சௌத் அல்-கபீர் என்ற சவூதி இளவரசருக்கு தலைநகர் ரியாத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் வாய்ச்சண்டையில் ஒருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டோர் பொதுவாக சிரச்சேதம் செய்யப்படுவது வழக்கம். இளவரசர் கபீர் இந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டோரில் 134வது நபர் என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இளவரசர் கபீர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. `பாதுகாப்பையும் நீதியையும் பாதுகாக்க` அரசு ஆர்வமுடன் இருப்பதை மக்களுக்கு இந்த மரண தண்டனை நிறைவேற்றம் உறுதிப்படுத்தும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*