ரயில் தடம்புரண்டு கோர விபத்து; 117 பேர் மரணம்; 200 பேர் காயம்; உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு!

_92567390_kanpur4 _92567421_kanpur9

இந்தியா கான்பூர் அருகே இன்று காலை நடந்த எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இதுவரை 117 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் 76 பேர் நிலை மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன்போது மொத்தம் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. லக்னோ,மத்தியப் பிரதேச மாநிலம் மற்றும் மஹாராஷ்டிராவை இணைக்கும் இந்தப் பாதை ஒற்றை ரயில் பாதையாக இருப்பதால் பல ரயில் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

விபத்துக்குள்ளான ரெயிலில் பயணம் செய்த கிருஷ்ண கேஷவ் என்பவர் விபத்து நடந்த போது மூன்று நான்கு முறை பெரும் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததாகக் கூறினார்.

நான் எஸ்-12 பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன், அப்போது காலை சுமார் 3 மணி இருக்கும்., நான் விழித்துக்கொண்டேன். எங்கும் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. ஆனால் எங்கள் பெட்டியில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நாங்கள் எல்லோரும் பெட்டியில் இருந்து இறங்கினோம். வெளியே ஒரே கும்மிருட்டாக இருந்த்து. ரெயில் பெட்டிகள் தடம் புரண்டிருந்ததையும், சில பெட்டிகள் ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டிருந்ததையும் பார்த்தோம்.

அக்கம்பக்கத்திலிள்ள கிராமங்களிலிருந்து பலர் வந்து சிக்கிக்கொண்ட பயணிகளை வெளியே கொண்டுவர உதவினர், போலிஸார் ஒரு மணி நேரத்துக்குப் பின் தான் வந்தனர். ஆம்புலன்ஸ்கள் வந்தன என்று மேலும் கூறினார். @BBC

_92567388_kanpur3_92567395_kanpur6 _92567419_kanpur8 _92567423_kanpur10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*